-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் அன்பை உணர்ச் செய்வார்

அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
ஒரு முஸ்லிம்  அன்பை உணர்ச் செய்வார் ..

பெற்றோரின் தலையாயக் கடமைகளில், அவர்கள் பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணர்ச் செய்வதும் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன  ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும்.

கருணை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி [ஸல்] அவர்களிடம் காணப்பட்ட மிகச்  சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.

அனஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள்..  ''நபி [ஸல்] அவர்களை விட குடும்பத்தாரிடம் கருணை கொண்ட எவரையும் நான் கண்டதில்லை''. மேலும் கூறினார்கள்..  ''மதீனாவின் மேடான பகுதியிலிருந்து ஒரு வீட்டில் நபி [ஸல்] அவர்களின் மகனார் இப்ராஹீம் [ரலி] அவர்களுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி [ஸல்] அவர்கள் அங்கு சென்று வருவார்கள். நாங்களும் உடனிருப்போம் . வீட்டினுள் நுழைந்து அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். பின்பு திரும்பி வருவார்கள்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]


நபி [ஸல்] அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தையும் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''நபி [ஸல்] அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.
நூல்கள்.... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

அனஸ் [ரலி] அவர்களது பொன்மொழிகளில் ஒன்று.. ''நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களின் கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்''.
நூல்.. முஸ்னத் அஹ்மத்] 

அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்கள் ஹஸன்  [ரலி] அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ராஃ இப்னு ஹாபிஸ் [ரலி] அவர்கள்   ''எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரையும் நான்  முத்தமிட்டதில்லை'' என்று கூறினார். அப்போது நபி [ஸல்] அவர்கள்  ''கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்பதை வலியுறுத்தினார்கள்.

ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி [ஸல்] அவர்களிடம்  ''நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை '' என்று கூறினார். அதற்கு நபி [ஸல்] அவர்கள்  ''அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' என்று கூறினார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
அன்னை ஆயிஷா [ரலி ] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் ஃ பாத்திமா [ரலி] வந்தால் நபி [ஸல்] அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச்  செய்வார்கள். நபி [ஸல்] அவர்கள் ஃபாத்திமா [ரலி] அவர்களிடம் சென்றால் அவர்கள் எழுந்து நபி [ஸல்] அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப்  பிடித்து முத்தமிடுவார்கள். இன்னும் தங்கள் இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி [ஸல்] அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஃபாத்திமா [ரலி] வந்தார்கள். அப்போது நபி [ஸல்] அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள்.
நூல்....ஸஹீஹுல் புகாரி.]

உண்மை முஸ்லிம்  இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின சித்தம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது வன்மையாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் இம்மார்க்கம் பிரகாசமான நேர்வழியைக் காட்டித் தருகிறது,, இதயத்தை மென்மைப்படுத்துகிறது அன்பின் ஊற்றுகளைப்  பீறிடச்  செய்கிறது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!