அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் 🌠🌟🏠
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி [ஸல்] அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. ''யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள்.[அந்த விஷயம்] உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
நபி [ஸல்] அவர்கள் பின்வரும் விஷயத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதாவது உள்ளத்தின் குரோதங்களை அழித்து , போட்டி, பொறாமை என்ற அழுக்குகளை தூய்மைப்படுத்தும் ஒரே சாதனம் உன்னதமான சகோதரத்துவம்தான். இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமுதாய வாழ்க்கை பரஸ்பர அன்பு, ஒற்றுமை என்ற உறுதியான அடித்தளத்தின் மீது அமையும். இன்னும் இதன் மூலம் சமுதாய கட்டிடம் சூழ்ச்சி, லஞ்சம், பொறாமை, அநீதம் போன்ற விரிசல்களிலிருந்து பாதுகாப்பு பெரும். இதை முன்னிட்டு சகோதரர்களுக்கிடையே ஸலாமைப் பரப்புமாறு நபி [ஸல்] அவர்கள் ஏவினார்கள். அதன்மூலம் இதயங்கள் விரிவடைந்து நன்மைகள் பொங்கி வழியும்.
நபி [ஸல்] அவர்கள் இக்கருத்தை தனது தோழர்களிடம் வலியுறுத்தி அவர்களது இதயங்களில் சகோதரத்துவத்தின் நேச வித்துகளை விதைத்தார்கள். அதைப் பராமரித்து மென்மேலும் வளர்க்க வேண்டுமெனவும் உபதேசித்தார்கள் . அப்போதுதான் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்பும் பிரகாசமிக்க சகோதரத்துவக் கனிகளை சுவைக்க முடியும்.
நபி [ஸல்] அவர்கள் இந்த நேசத்தை, இஸ்லாமியப் பேரொளியை இவ்வுலகம் முழுவதும் பரவச் செய்து தனது தோழர்களிடம் உருவாக்கினார்கள். அவர்கள் இஸ்லாமியக் கோட்டையின் அடித்தளமாக அமைந்தார்கள் .
இஸ்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் இந்தத் தூய்மையான நேசத்தை விதைத்திருக்கவில்லையெனில் ஆரம்பகால முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் நாடுகளைக் கட்டமைப்பதில் அவர்கள் மகத்தான தியாகங்களைச் செய்துருக்க முடியாது.
இந்த உன்னதமான நேசத்தின் மூலமே நபி [ஸல்] அவர்கள் மனிதகுல வரலாறு கண்டிராத இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கினார்கள்.
நபி [ஸல்] கூறினார்கள்.. ''ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவராவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது.''
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
மேலும் கூறினார்கள்.. ''முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணை காட்டுவதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஓர் உடலைப் போன்றதாகும். அதில் ஏதேனும் ஓர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையும் முறையிடுகின்றன.''
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
மேலும் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் வலியை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன . தலை வலி'யை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன.''
[ஸஹீஹ் முஸ்லிம் ]
நபி [ஸல்] அவர்களின் இந்த உன்னத வழிகாட்டலை அறிந்து முஸ்லிம் தனது இதயத்தை மென்மையாக்கி சகோதரர்களையும் நண்பர்களையும் நேசிப்பதைத் தவிர வேறு வழியைக் காணமாட்டார். இதனால் அவர் இவ்வுலகில் நன்மைகளை விதைக்கிறார். அதன் பலனாக மறுமையில் அல்லாஹ்வின் நேசத்தையும், திருப்பொருத்தத்தையும், வெற்றியையும் அறுவடை செய்து கொள்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!