-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஃபஜ்ர் மற்றும் இஷா தொழுகையின் மகத்தான நற்கூலிகள்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பெரும்பாலும் முஸ்லிம்  மக்கள்கள் அலட்சியமாகவும், அசட்டையாகவும் போடுபோக்கியாகவும்  இருக்கும் தொழுகையில் அது ஃபஜ்ரு தொழுகைதான்!

ஃபஜ்ரு மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி [ஸல்] அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள் . அதில் இரண்டை மட்டும் காண்போம்.

உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.  ''இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.ஃபஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]


அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..   ''நயவஞ்சகர்களுக்கு ஃபஜ்ரு மற்றும் இஷாவைவிட  கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

மறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம்  இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நஃபில்கள்  தொழுவதைத் தவறவிட மாட்டார். அதிகமாக நஃபில்  தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது.  அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்குக்  கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்தத்தையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும்.  அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றுகிறது..

''எனது அடியான் நஃபில்களில்  மூலம் என்னை நெருங்கி கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால்  அவன் கேட்கும் சேவையாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

ஓர் அடியானை அல்லாஹ் நேசித்தால் வானம் பூமியில் உள்ளவர்களும் நேசிக்காத தொடங்குகிறார்கள். இதற்கு அபூஹுரைரா [ரலி] அவர்களின் அறிவிப்பு பொருத்தமாக அமையும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''அல்லாஹ் ஓர் அடியானை நேசித்தால் ஜிப்ரீல் [அலை] அவர்களை அழைத்து  'நான் இன்ன அடியானை நேசிக்கிறேன்,, நீங்களும் நேசிக்க வேண்டும்'' என்று கூறுகிறான். அவர் நேசிக்கிறார். பிறகு வானத்தில் உள்ளவர்களை அழைத்து  'நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை நேசிக்கிறான்,, நீங்களும் நேசம்  கொள்ளுங்கள்'' என்று          கூறுகிறார். பின்பு அந்த அங்கீகாரம் பூமிக்கும் இறக்கப்படுகிறது. அவ்வாறே ஓர் அடியானை அல்லாஹ் வெறுத்தால் ஜிப்ரீல் [அலை] அவர்களை அழைத்து  ''நான் இன்ன மனிதனை வெறுக்கிறேன்,, நீங்களும் அவனை வெறுத்துவிடுங்கள்'' என்று கூறுகிறான். அவர் வெறுப்பை வெளிப்படுத்துகிறார். பிறகு வானத்தின் உள்ளவர்களை அழைத்து  ''நிச்சயமாக அல்லாஹ் இம்மனிதரை வெறுக்கிறான்,, நீங்களும் வெறுத்துவிடுங்கள்!'' என்று கூறுகிறார். வானத்தின் உள்ளவர்களும் வெறுக்கிறார்கள். பிறகு அவன் மீதான வெறுப்பு பூமிக்கு இறக்கப்படுகிறது.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

இதனால்தான் நபி [ஸல்] அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று வணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அது குறித்து   ''அல்லாஹ்வின் தூதரே! ஏன்  இவ்வாறு தொழுகிறீர்கள்?  உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ்  மன்னித்துவிட்டானே'' என்று கேட்டபோது  ''நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா?'' என நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

இறையச்சமுள்ள தொளுகையாளின் அபயமளிக்கும்  அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள்.  அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் திடுக்கிடவோ, நன்மைகள் அடைந்தால்  தடுத்து வைத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இதையே பின்வரும்  வசனம் தெளிவுபடுத்துகிறது.

மெய்யாகவே மனிதன் பதட்டக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தாள் [திடுக்கிட்டு] நடுங்குகிறான். அவனை யாதொரு நன்மை அடைந்தாலோ அதனை  [பிறருக்கும் பகிர்ந்தளிக்காது] தடுத்துக் கொள்கிறான். ஆயினும் தொழுகையாளிகளைத் தவிர.
அல்குர்ஆன் 70..19-22]

அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு  ''முஸ்லிம்  ஜகாத்தை நிறைவேற்றுவார்..'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!