அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நஃபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் [துல்ஹஜ் பிறை 9] மற்றும் முஹர்ரம் பிறை 9.10 போன்ற காலங்களிலும் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.
இது குறித்து நபிமொழிகள்..
அபூ கதாதா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, ''அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும '' என்று கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லீம்]
இப்னு அபபாஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''நபி [ஸல்] அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்,, அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
அபூ கதாதா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது ''அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்'' எனக் கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
இப்னு அபபாஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ]
அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அதை நோன்பின் மாண்பை பற்றி இறைத்தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுதும் நோன்பு நோற்றவராவார்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் லுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி [ஸல்] அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.''
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
அபூதர்தா [ரலி] அவர்கள் கூறியதாவது.. ''எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, லுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.''
[ஸஹீஹ் முஸ்லிம் ]
அப்துல்லாஹ் இப்னு அம்ரு [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
[ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13,14,15வது நாட்களைக் குறிக்கும் . அதனை அய்யாமுல் பீல் என்ற கூறப்படும். அவ்வாறே நபி [ஸல்] அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.
முஆதத்துள் அதவிய்யா [ரலி] அவர்கள் கூறினார்கள்..நான் அன்னை ஆயிஷா [ரலி] அவர்களிடம் ''நபி [ஸல்] அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?'' என்று கேட்டேன். அன்னையவர்கள் ''ஆம்!'' ''மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?'' எனக் கேட்டேன். ''மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி [ஸல்] அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை'' என பதிலளித்தார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு ''இறுதி கடமையான ஹஜ்''

கருத்துகள்
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!