-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வியாழன், 8 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் உண்பதிலும், குடிப்பதிலும் நடுநிலையானவர்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முஸ்லிம்  தனது உடல், அறிவு, ஆன்மா ஆகியவற்றுக்கிடையே சமத்துவத்தைப் பேணுவார்.
அ -அவரது உடல் நலம் ..........உண்பது, குடிப்பதில் நடுநிலையானவர்.

முஸ்லிம்  தனது உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக உண்பது, குடிப்பதில் நடுநிலையைப் பேணுவார். உணவை பேராசையுடன் அணுகவும் மாட்டார், முற்றிலும் குறைக்கவும் மாட்டார். அவரது முதுகெலும்பு நிமிர்ந்து நிற்கவேண்டும். அவரது வலிமையையும் ஆரோக்கியமும் உற்சாகமும் காக்கப்பட வேண்டும். இதுவே உணவுக்கான அளவுகோலாகும் .

[இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை] நீங்கள் [தாராளமாக] புசியுங்கள்,, பருகுங்கள். எனினும் [அவற்றில்] அளவு கடந்து [வீண்] செலவு  செய்யாதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அளவு கடந்து [வீண்] செலவு செய்வோரை நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் .. 7..31]


உண்பது, குடிப்பதில் நடுநிலையை வலியுறுத்தி நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஆதமுடைய மகன் நிரப்பும் பைகளில் மிகக்  கெட்டது  அவனது வயிறாகும் . சாப்பிடுவதாக இருந்தால் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியைக் குடிப்பதற்கும் மூன்றாவது பகுதியை மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.
நூல்,, ஸூனன் திர்மிதி]

உமர் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. ''வயிறு நிரம்ப உண்பது மற்றும் குடிப்பதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அது ஆரோக்கியத்தைப் பாதித்து நோயிகளை உருவாக்கும்,, தொழுகையில் சோம்பலை ஏற்படுத்தும். அந்த இரண்டிலும் நடுநிலையை மேற்கொள்ளுங்கள். அது உடலை சீர்படுத்தி வீண் விரயத்தை தவிர்க்கும். நிச்சயமாக அல்லாஹ் கொழுத்த உடல்களை முற்றிலும் வெறுக்கிறான். நிச்சயமாக மனிதன் மார்க்கத்தைவிட தனது மனோஇச்சையைத் தேர்ந்தெடுத்தால் அழிந்து விடுவான்.
அல் கன்ஜ் ]

முஸ்லிம்  போதைப்  பொருட்களையும் செயற்கை உற்சாகத்தை அளிக்கும் மருந்துகளையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அவைகளில் ஹராமானவைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். விரைவாக உறங்கி விரைவாக எழுந்திட வேண்டும். நோய்க்  காலங்களில் மட்டுமே மருந்து சாப்பிட வேண்டும். அவரது வாழ்க்கை முறையே இயற்கையான உற்சாகத்திற்கும்  ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைய வேண்டும்.

உடல் வலிமைமிக்க முஃமின் பலவீனமான முஃமினை விட அல்லாஹ்வுக்கு மிக உவப்பானவர் என்பதை உண்மை முஸ்லிம்  விளங்கி கொள்ளவேண்டும். இதை நபி [ஸல்] அவர்கள் உறுதிப்  படுத்தியுள்ளார்கள் . எனவே உடல் வலிமையைப் பேண  தனது வாழ்வில் ஆரோக்கிய வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு    '' ஒரு முஸ்லிம்  உடல், உடையில் தூய்மையானவர். '' [உடல் பயிற்சி செய்து வருவார்]     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!