-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 24 செப்டம்பர், 2016

முஸ்லிம் விரும்பும் மனைவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முஸ்லிம்  விரும்பும் மனைவி

பெண் மற்றும் திருமணம் குறித்த இஸ்லாமின் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் முஸ்லிமை இக்காலத்தில் வெளிப்பகட்டு அலங்காரங்களைக் கொண்ட இளம் பெண்கள் கவர்ந்திட முடியாது. மாறாக , மார்க்கப் பற்றுள்ள பெண்கள்தான் அவரை ஈர்க்க முடியும். தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் நிதானத்துடன், நிம்மதியான மகிழ்ச்சிகரமான திருமண வாழ்வுக்கு வழிவகுக்கும் இஸ்லாமிய நற்பண்புகளைப்  பெற்ற  பெண்ணையே தேர்ந்தெடுப்பார். தான் தோன்றித்தனமாக இளைஞர்களைப்  போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சியையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். இதற்கெல்லாம் மேலாக மார்க்கப்பற்று, சிறந்த அறிவு நன்னடத்தை உடையவளையே அவர் விரும்புவார். இது விஷயத்தில் நபி [ஸல்] அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பார்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்ப பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கப் பற்றுக்காக. மார்க்கப் பற்றுடையவளை [மணந்து] வெற்றி அடைந்துகொள் ! உன் இருகரங்களும்  மண்ணாகட்டும்!''
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் முஸ்லிம்  இளைஞர்களுக்கு மார்க்கப் பேணுதல் உடைய பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு உபதேசித்தது. அழகான பெண்ணை விரும்பக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனெனில், நபி [ஸல்] அவர்கள் திருமணத்துக்கு முன் அப்பெண்ணை பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கது என்றார்கள். முஸ்லிம்  தனது மனத்துக்குப் பிடிக்காத, அவனது கண்களுக்கு மகிழ்ச்சியளிக்காத பெண்ணை மணந்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ள நபி [ஸல்] அவர்கள் ஏவினார்கள்.

முகீரா இப்னு ஷூஃ பா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்களின் காலத்தில் நான் திருமணம் செய்ய பெண் பேசினேன். நபி [ஸல்] அவர்கள்  ''அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?'' என்று கேட்டார்கள். நான்  ''இல்லை'' என்றேன். நபி [ஸல்] அவர்கள்  ''அவளைப்  பார்த்துக்கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிகச்சிறந்ததாகும்'' என்று கூறினார்கள்.
நூல்.. ஸூனனுன் நஸாயீ]


நபி [ஸல்] அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நற்குணமுடைய பெண்ணிடம் அழகும் விரும்பத்தகுந்த பண்புகளில் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள் .இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்பது கருத்தல்ல.

இதனால்தான் நபி [ஸல்] அவர்கள் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களுக்கு கூறினார்கள்.. ''மனிதன் பொக்கிஷமாகக் கருதுவதில் மிகச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? [அதுதான் ] நற்குணமுடைய பெண். கணவன் அவளைப்  பார்த்தால் அவனை மகிழ்விப்பாள். அவன் ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவன் இல்லையென்றால் அவனை பாதுகாத்துக் கொள்வாள். [இவ்விடத்தில் மனைவி தனது கற்பை பாதுகாப்பதை கணவனை பாதுகாப்பதென்று நபி [ஸல்]  அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்].
நூல்.. முஸ்தத்ரக்குள் ஹாகிம்]

அபூஹுரைரா [ரலி] அவர்கள் நபி [ஸல்] அவர்களிடம் கேட்டார்கள்.. பெண்களில் மிகச் சிறந்தவர் யார்? நபி [ஸல்] அவர்கள்,  'கணவன் அவளைப்  பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள் . அவனது பொருளிலும் அவன் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் [ஈடுப்பட்டு] அவனுக்கு மாறுசெய்யமாட்டாள் ''என்று கூறினார்கள்.
நூல் முஸ்னத் அஹ்மத்]

இது கணவனுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தன்மைகொண்ட மனைவி பற்றிய நபி [ஸல்] அவர்கள் கூறிய உயர்ந்த கண்ணோட்டமாகும். இத்தகைய பெண்ணே இல்லறத்தில் சிரமங்களை சகித்துக் கொள்வாள். இல்லத்தில் திருப்தி, அமைதி மற்றும் உற்சாகத்தை ஊற்றெடுக்க செய்வாள். சந்ததியை சிறந்த முறையில் பேணி கொள்வாள். வீரமிக்க மக்களாகவும் சிறந்த அறிஞர்களாகவும் அவர்களை உருவாக்குவாள் .

மனம், உடல் , ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு  ஏற்ப உறுதிமிக்க சமநிலை பெற்ற  அஸ்திவாரத்தின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்ணயிக்கப்பட வேண்டுமென நபி [ஸல்] அவர்கள் வலியுறுத்தினார்கள். அப்போதுதான் திருமணஉறவு உறுதியாக அமைந்து வெறுப்புணர்வும் மனஸ்தாபமும் தலைதூக்காதிருக்கும். உண்மையான முஸ்லிம்  எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றுவார்  அவர் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
 
அன்பும், நேசமும் கொண்ட இஸ்லாமிய இளைஞர்களே!
 உங்களின் திருமணம் எப்படி அமையவேண்டும் என்பதை அறிய நீங்கள் இதை அவசியம் படிக்கவேண்டும்! படித்து அறிந்துகொள்ள வேண்டும்!

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!