-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 30 நவம்பர், 2016

நன்மைகள் தரும் மென்மை 💫👍

நன்மைகள் தரும் மென்மை 💫👍
இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங் களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை.

செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல் முன்னேற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை விட மனிதர்களின் அறிவை மழுங்கச் செய்யும் காரியத்திற்கும், அவர்களின் ஒழுக்க வாழ்வை நாசப்படுத்துவற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மனிதர்கள் இக்கருவிகளால் தங்களுக்கு தாங்களே கேடு விழைவித்து கொள்கின்றனர்.
நவீன கருவிகளில் மனிதர்கள் தொலைந்து விட்டதால் அவர்கள் இழந்த இழப்புகள் ஏராளம். வளமான வாழ்வு, நல்ல நட்பு, குழந்தைகளின் பாசம், நல்லறிவு, நற்பண்புகள் இவ்வாறாக மனிதர்கள் தொலைத்த நன்மைகள் பல. இவற்றுள் மென்மையும் ஒன்று.

திங்கள், 28 நவம்பர், 2016

இறை மறுப்பதைத் தூண்டும் பெருமை!💃😇

இறை மறுப்பதைத் தூண்டும் பெருமை!💃😇
அனைத்துவிதமான மோசமான தன்மைகள், தீய செயல்பாடுகள் மற்றும் வழிகேடுகளை விட்டும் விலகியிருக்குமாறும், அவற்றிலிருந்து மீண்டு வரு மாறும், மனித சமுதாயத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் வேண்டு கோள் விடுக்கிறது. இவ்வகையிலே இன்று சர்வசாதாரணமாக சகமனிதர்களிடத்தில் தென்படுகின்ற பெருமையடிக்கின்ற பண்பைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுவாகவே பெருமையடிப்பவர்கள் தங்களுடைய தொழில், நற்செயல்கள், குடும்பம் மற்றும் பழக்கவழக்கங்க ளைப் பற்றி அடுத்தவர்களிடம் அவசியமின்றி கூறி ஆனந்தம டைவதை அறிந்துள்ளோம். மேலும் இப் பண்புடையவர்களுக்கு மற்றொரு வரையறையை நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

மட்டமாக கருதுவது
“சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும் தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)” என்று கேட்டார். “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான். பெருமை கொள்வது என்பது சத்தியத்தை நிராகரிப்ப தும், மக்களை இழிவாக எண்ணுவதுமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : முஸ்லிம் 131.

அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் 🌠🌟🏠

அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் 🌠🌟🏠
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி [ஸல்] அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்..  ''யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத்  தரட்டுமா? அதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள்.[அந்த விஷயம்] உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள்.
[ஸஹீஹ் முஸ்லிம் ]

ஞாயிறு, 27 நவம்பர், 2016

முயற்சி திருவிணையாக்கும் !

முயற்சி திருவிணையாக்கும் ! [சிந்தனையூட்டும் கட்டுரைகள் ]
இன்பங்களும் துன்பங்களும் இரண்டறக்கலந்த கலவைதான் இவ்வுலக வாழ்க்கை. இவ்வாழ்க்கையில் பருவ மாற்றங்களைப்போல இடையிடையே எட்டிப்பார்க்கின்ற எதிர்ப்புகள், பிரச்சனைகள் மற்றும் பின்னடைவுகளை எதிர்கொள்ள இயலாமல் மக்களில் பலர், தங்களுடைய இலட்சிய இலக்கை விட்டும் பாதியிலேயே புறமுதுகிட்டு ஓடிவிடுகின்றார்கள்.
அரிதாக சிலர் பல்வேறான மாற்று முயற்சிகள், கடும் உழைப்புகள் மூலம் துயரங்கள் தூக்கிப் போடுகின்ற முட்டுக்கட்டைகளை உடைத் தெறிந்துவிட்டு, தங்களது இலட்சிய எல்லையை திட்டமிட்டபடி எட்டிப் பிடிப்பதைப் பார்க்கின்றோம். இத்தகையவர்கள் அனைத்து துறைகளிலும் இருக்கின்றார்கள்.

உதாரணமாக அறிவியல் அறிஞர்கள், ஆய்வுகளில் ஈடுபடுகின்றபோது தங்களைத் தோல்விகள் தாக்கினாலும் தளர்ந்துவிடாமல் முயற்சித்ததால் தான், இன்று நாம் நவீன கருவிகளால் அலங்கரிகப்பட்ட நவீன வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதனாலேயே முயற்சித் திருவினையாக்கும்… என்ற பழமொழி சமுதாய வழக்கில் இன்றளவும் இருந்து கொண்டிருக்கின்றது. சுருங்கச் சொன்னால், இவ்வுலக வாழ்க்கையிலே ஆசைப்படுகின்றவற்றை அடைவதற்கேற்ப நம்மிடத்தில் ஆர்வமும், முயற்சியும் அவசியமாக இருக்க வேண்டும்.

வியாழன், 3 நவம்பர், 2016

முஸ்லிம் தனது சகோதரர்கள் , நண்பர்களுடன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முஸ்லிம் தனது சகோதரர்கள் , நண்பர்களுடன் .........

அல்லாஹ்வுக்காக நேசிப்பார்....
தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்ற நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் ஏற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப்  பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

ஒருவரது இனம் , மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு  ''லா இலாஹ இல்லல்லாஹ்'' என்ற திருக்கலிமாவின் கீழ் இஸ்லாம் மனிதர்களை சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.

விசுவாசிகள் [யாவரும்] நிச்சயமாக சகோதரர்களே ! [அல்குர் ஆன் 49..10]

ஈமானிய சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும் . அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது.