-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் அழகிய தோற்றமுடையவர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

உண்மை முஸ்லிம்  ஆடம்பரமோ வீண்விரயமோ இல்லாமல் தனது ஆடைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்,, அழகிய வடிவுடன் தூய்மையுடன் தோற்றமளிக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் காண்பவர்களின்  கண்கள் குளிர்ச்சியடையும்,, இதயங்கள் அவரை நேசிக்கும். மக்களிடையே வரும்போது இழிந்த தோற்றத்தில் இல்லாமல் தன்னை முறையாக அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். நபி [ஸல்] அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தங்களை அழகுபடுத்திக் கொள்வதை விட தோழர்களைச்  சந்திக்கச் சென்றால் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வார்கள்.

[நபியே!] கூறுங்கள். அல்லாஹ் தன்  அடியார்களுக்காக அளித்திருக்கும் [ஆடை] அலங்காரத்தையும் பரிசுத்தமான [மேலான] ஆகாரத்தையும்  [ஆகாதவையென்று] தடுப்பவர் யார்?
அல்குர்ஆன்.. 7..32]


இமாம் குர்துபி [ரஹ்] அவர்கள் இந்த வசனத்திற்கான விரிவுரையில்  குறிப்பிடுகிறார்கள்.. அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் கூறினார்கள்..  ''நபி [ஸல்] அவர்களைக் காண சில தோழர்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். நபி [ஸல்] அவர்கள் வெளியே வரத்தயாரானபோது வீட்டில் நீர் நிரம்பிய குவளையைக் கண்டார்கள். அந்த தண்ணீரில் முகம்பார்த்துக் கொண்டு தனது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்தார்கள்.  நான் நபி [ஸல்] அவர்களிடம் '' நபி [ஸல்] அவர்களே! நீங்களா இதைச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன் . நபி [ஸல்] அவர்கள் ''ஆம்! ஒரு மனிதர் தன்  சகோதரர்களை சந்திக்கச் சென்றால் தன்னை சீர்படுத்தி கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகையே நேசிக்கிறான்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம்  தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் நடுநிலையான இஸ்லாமிய கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொள்வார். நடுநிலையான கொள்கை என்பது வரம்புமீறி அதிகப்படுத்தவும் கூடாது. எல்லை மீறி குறைக்கவும் கூடாது.

அன்றி அவர்கள் செலவு செய்தால், அளவைக் கடந்துவிட மாட்டார்கள், உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள்.
அல்குர்ஆன் .. 25..67]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. '' நிச்சயமாக அல்லாஹ் தனது அடியானின் தனது அருட்கொடையின் அடையாளம் வெளிப்படுவதை விரும்புகிறான்.
நூல்.. ஸூனனுத் திர்மிதி]

''ஆதமுடைய மக்களே! தோலும் இடத்திலெல்லாம் [ஆடைகளினால்] உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். [இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை] நீங்கள் [தாராளமாக] புசியுங்கள், பருகுங்கள். எனினும் [அவற்றில்] அளவு கடந்து [வீண்] செலவு செய்யாதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக அல்லாஹ் அளவுகடந்து [வீண்] செலவு செய்வோரை நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் ..7..32]

இப்னு மஸ்வூது [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''எவனது  இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புக  மாட்டான்'' என்று  நபி  [ஸல்] அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் ஒருவர் ஆடை, காலனி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் [அது பெருமையில் சேருமா] என்று கேட்டார். நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  'நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுப்படுத்துவதுதான்.''
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''ஐந்து விஷயங்கள் இயற்கையான பண்புகளாகும். கத்னா [விருத்த சேதனம்] செய்வது, அபத்தின் முடியை சிறைப்பது, அக்குள் முடியைப் பிடுங்குவது, நகங்களை வெட்டுவது மற்றும் மீசையை  குறைப்பது .''
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

மனிதனுக்குரிய இயற்கைப் பண்புகளை பேணுவதன் காரணமாகவே இம்மார்க்கம் நேசிக்கப்படுகிறது. சீரான சிந்தனை உடையவர்கள் இப்பண்புகளை பேணுவதில் ஆற்வம் கொள்கின்றனர்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு  '' ஒரு முஸ்லிம்  அவரது அறிவு''      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!