-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

அதிகமாக குர்ஆன் ஓதுவார் [முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

ஈமான் என்ற இந்த உயரிய அந்தஸ்தை அடைவதற்காக முஸ்லிம்  பரிசுத்த திருக்குர்ஆனின்  நிழலில் இளைப்பாறுவதை வழமையாக்கி , நேர்வழியின்  தென்றலை சுவாசித்து நன்மையின் உச்சத்தை அடைவார். அதன் வசனங்களை இறையச்சத்துடன் இரவு பகலில் அதிகமதிகம் ஓதி அவைகளை ஆழ்ந்து சிந்திப்பார். அதற்காக குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்குவார். தனது இரட்சகனுடன்  உரையாடி , அவனின் வேத கருத்துக்களை ஏற்று, இதயத்தைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டு தனது ஈமானையும் மன  நிம்மதியையும் அறிவாற்றலையும் அதிகரித்துக் கொள்வார்.

அல்லாஹ்வின் திருநாமத்தை நினைவு கூறுவதால் [உண்மை விசுவாசிகளின்] இதயங்கள் நிச்சயமாக நிம்மதியடையும் என்பதை [நபியே! நீர் ] அறிந்து கொள்ளும்.                                                  [அல்குர்ஆன்..13..28]

இறையச்சமுள்ள முஸ்லிம் , நபி [ஸல்] அவர்கள் கற்றுத்தந்த அழகிய முறையில் குர்ஆனை  அணுக வேண்டும்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''திருக்குர்ஆனை  ஓதுகின்ற முஃமினின்  நிலை ஆரஞ்சுப் பழத்தைப்  போன்றதாகும். அதன் சுவையும் நன்று, வாசனையும் நன்று.[மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்ட] குர்ஆன் ஓதாத பேரீச்சம் பழத்தை  போன்றவராவார். அதன் சுவை நன்று, [அனால்] அதற்கு வாசனை கிடையாது. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்ஆனையும்  ஓதி வருகிறவனின் நிலையானது துளசி செடியின் நிலையை ஒத்திருக்கின்றது.  அதன் வாசனை நன்று , சுவையோ கசப்பு. நயவஞ்சகனாக இருந்து கொண்டு குர்ஆனை  ஓதாமலிருப்பவனின் நிலையானது குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு, அதற்கு வாசனையும் கிடையாது.''
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள்..  ''நீங்கள் குர்ஆனை  [அதிகமதிகம்] ஓதுங்கள். அது அதை ஓதியோருக்கு மறுமை நாளில் சிபாரிசு செய்யும்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

மேலும் கூறினார்கள்..  'குர்ஆனை  நன்கறிந்து  ஓதுபவர்  மறுமை நாளில் மிக கண்ணியமான நல்லோர்களுடன் இருப்பார்.  குர்ஆனை  ஓதும்போது சிரமத்துடன் திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு''.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

இதற்கு பிறகும் ஓர் உண்மையான முஸ்லிம்  திருக்குர்ஆனை  ஓதி அதன் கருத்துக்களைச்  சிந்திப்பதிலிருந்து அலட்சியமாக இருந்துவிட முடியுமா என்ன?
ஆழ்ந்த இறைநம்பிக்கை, நிரந்தரமான நற்செயல்கள், எப்போதும் அல்லாஹ்வின்  திருப்பொருத்தத்தை எதிர்நோக்கல், அல்லாஹ்விடம் தனது அடிமைத்தனத்தையும் உறுதிப்படுத்துதல் ஆகியவையே ஒரு முஸ்லிம்  தனது இரட்சகனுடன் கொள்ளவேண்டிய தொடர்பாகும் .
[எனக்கு வழிப்பட்டு என்னை] வணங்குவதற்கன்றி ஜின்களையும் மனிதர்களையும் நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன் .. 52..56]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த, தலைப்பு   '' முஸ்லிம்  தனது நஃப்ஸூடன் ''
அடுத்து வரும் தலைப்பு ரொம்ப முக்கியான நிறைய அறிந்து கொள்ளவேண்டிய விடயங்கள் இருக்கின்றன. இன்ஷாஅல்லாஹ் நாம் இரண்டாவது முக்கியமான தலைப்புக்கு  போகப்போகிறோம்......              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!