-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் முதலில் தாய்க்கு அடுத்து தந்தைக்கு உபகாரம் செய்வார்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  முதலில் தாய்க்கு அடுத்து தந்தைக்கு உபகாரம் செய்வார்.

பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் உபகாரத்தில் சமநிலையை தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இஸ்லாம் இருவருக்குமேற்றவாறும் தாய்க்கெனத் தனியாகவும் தந்தைக்கெனத் தனியாகவும் அழகிய வழிகாட்டுதலை அளித்திருக்கிறது.

தன்னிடம் ஜிஹாது செய்வதற்கான அனுமதி கேட்டவரிடம்  அண்ணல் நபி [ஸல்] அவர்கள் உன் பெற்றோரில் ஒருவராவது உயிருடன் இருக்கிறாரா? என்று கேட்டத்திலிருந்து அவ்விருவரும் சமமாக கவனிக்காத தகுந்தவர்களே ,, இருவருக்குமே உபகாரம் செய்வது கடமை' என தெரியவருகிறது.

அவ்வாறே அஸ்மா [ரலி] அவர்களை இணைவைக்கும் தாயுடன் இணக்கமாக இருக்க நபி [ஸல்] உத்தரவிட்டதையும் கண்டோம். நபி [ஸல்] அவர்களிடம் ஒருவர்  'இறைத்தூதரே ! நான் அழகிய முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்? என்று கேட்டார். நபி [ஸல்] அவர்கள் உமது தாய்'' என்றார்கள் . பிறகு யார்? என்று கேட்டார். ''உமது தாய்'' என்றார்கள். பிறகு யார்? என்று கேட்டார். உமது தந்தை என்று நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]


இந்த நபிமொழிகளில் நபி [ஸல்] அவர்கள் தந்தைக்கு உபகாரம் செய்வதைவிட தாயின் உபகாரத்திற்கு முதன்மை அளித்துள்ளார்கள். இதையே நபி [ஸல்] அவர்களுக்குப்பின் நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்.

தலைசிறந்த மேதையான இப்னு அப்பாஸ்   [ரலி] அவர்கள் தாய்க்கு உபகாரம் செய்வதை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்யும் நற்செயலாகச் கருதினார்கள் . அவர்களிடம் ஒரு மனிதர், ''நான் ஒரு பெண்ணை மணமுடிக்க விரும்பினேன் அவள் மறுத்து விட்டாள் . மற்றொருவர் விரும்பியபோது அவள் சம்மதித்துவிட்டாள் . இதனால் ரோஷம் கொண்ட நான் அவளைக் கொலை செய்துவிட்டேன். எனக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்று கேட்டார். இப்னு அப்பாஸ் [ரலி]  ''உமக்கு தாய் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர்  ''இல்லை என்றார்.  ''அல்லாஹிவிடம் தௌபா செய்து, முடிந்தளவு அல்லாஹ்வின் நெருக்கத்தை தேடிக்கொள் என்றார்கள்  .

இதை அறிவித்த அதா இப்னு யஸார்  [ரஹ்] அவர்களிடம் கூறினார்கள். நான் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்களிடம்  'ஏன்  அவரது தாய் உயிருடன் இருக்கிறாரா என வினவினீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள்  'அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக ஆவதற்கு தாய்க்கு உபகாரம் செய்வதைவிட சிறந்த அமல் எதையும் நான் அறியவில்லை''. என்று கூறினார்கள்.
[அல்  அதபுல்  முஃப்ரத் ]

அல்குர்ஆன் மக்களின் இதயங்களில் பெற்றோருக்கு உபகாரம் செய்யும் உணர்வை வளர்க்கிறது. அதிலும் குறிப்பாக தாய்க்கு உபகாரம் செய்யவேண்டுமென்று வலியுறுத்துகிறது. கர்ப்பம், பாலூட்டல் என்ற இந்த இரண்டு நிலைகளும் அவளது வாழ்வின் மிகச்சிரமமான காலகட்டமாக இருப்பதால் தாயின் அந்தஸ்தை முன்னிலைப்படுத்தி அவளிடம் மிக மென்மையாக நடந்து கொள்ளுமாறு உத்தரவிடுகிறது.

தமது தாய் தந்தை [க்கு நன்றி செய்வது] பற்றி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து, [கர்ப்பத்தில்] அவனைச் சுமந்தாள். [அவன் பிறந்து] பிறகு இரண்டு வருடங்களுக்குப் பின்னரே அவனுக்குப்பால் மறக்கடித்தால். [ஆகவே மனிதனே!] எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்தி வா . [முடிவில் நீ] என்னிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது.
அல்குர்ஆன் .. 31..14]

எத்தனை அற்புதமான போதனை! மனித நேயத்தின் எத்தகு அபூர்வமான கண்ணோட்டம்! [நீ எனக்கும் உனது தாய் தந்தைக்கும் நன்றி செலுத்திவா ] மகன் பெற்றோருக்கு செய்யவேண்டிய நன்றியை அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய நன்றியின்  தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நன்றி, நற்செயல்கள் அனைத்திலும் தலையாயதாகும். இந்த மார்க்கம் பெற்றோருக்கு எவ்வளவு உயரிய அந்தஸ்தை வழங்கியுள்ளது என்பதைப்  பாருங்கள்!

பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வசதிகள் ஏற்பட்டு செலவச்  செழிப்பும் உண்டாக்கி, அழகிய மனைவியும் அன்பு குழந்தையும் அவனை அதிகம் கவர்ந்து, பெற்றோருக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவதிலிருந்து அவனைவிலக்கிவிடலாம் . தந்தையையும்   அவர் அவனுக்காக செய்த செலவுகளையும் மறந்து அவருக்கு  உதவி செய்யாமல் கரங்களை மடக்கிக்கொண்டவன் அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகிறான்.

ஆனால், உண்மை முஸ்லிம்  இது அனைத்திலிருந்து விலகி இருப்பார். ஏனெனில் அவர் எல்லாக் காலங்களிலும் ஞானமிக்க, இஸ்லாமின் உயரிய கண்ணோட்டத்தை கொண்டிருப்பவர். அவர் நபி [ஸல்] அவர்கள் கூறிய ''நீயும், உனது செல்வங்களும் உனது தந்தைக்குரியது'' [முஸ்னத் அஹ்மத், ஸூனன் அபூதாவூத்  ] என்ற உயரிய வழிகாட்டுதலை அறிந்திருப்பார்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!