-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 10 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் உடல், உடையில் தூய்மையானவர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
இஸ்லாம் விரும்பும் உண்மை முஸ்லிம் , மக்களிடையே மிகத்  தூய்மையானவராக இருக்க வேண்டும். இது குறித்து நபி [ஸல்] அவர்கள் சிறந்த முறையில் குளித்து மனம் பூசிக்கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஜூமு ஆ நாளில் அதைக் கடைபிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்கள்.

''நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இல்லையென்றாலும் ஜூமுஆ நாளில் குளித்து, தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்! மணம்  பூசிக்  கொள்ளுங்கள்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

நபி [ஸல்] அவர்கள்  இவ்வாறு குளித்து தூய்மையாக இருப்பதை பற்றி மிகவும் வலியுறுத்தியதால் சில இமாம்கள் ஜூமு ஆ தொழுகைக்காக குளிப்பது வாஜிப் எனக் கூறினார்கள்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஒவ்வொரு முஸ்லிமும்  வாரத்தின் ஏழு நாட்களில் ஒரு நாள் குளித்துக்கொள்வது கடமையாகும். அப்போது தனது தலையையும் உடலையும் கழுவிக் கொள்வாராக!
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

முஸ்லிம்  தனது ஆடை, காலுறைகளைத்  தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கால்கள் மற்றும் உடலில் வெறுக்கத்தக்க துர்நாற்றம் வருவதை அவர் விரும்பமாட்டார். நறுமணத்தின்  துணையுடன் அதை தவிர்த்துக் கொள்வார்.

அமீருல் முஃமின் உமர் [ரலி] அவர்கள் ''ஒருவர் தன்  செல்வத்தின் மூன்றில் ஒரு பகுதியை வாசனை திரவியங்களுக்காக செலவிட்டாலும் அவர் வீண் விரயம் செய்தவராகமாட்டார்'' என்று கூறி அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

பேணுதலான  முஸ்லிம்  ஒவ்வொரு நாளும் மிஸ்வாக்கு , பிரஷ் போன்ற சாதனங்களின் மூலம் தனது வாயைத் தூய்மைப்படுத்தி பிறருக்கு நோவினை தரும் வாயின் துர்நாற்றத்தை அகற்றிட வேண்டும். வருடத்தில் ஒருமுறையேனும் பல் மருத்துவரிடம் சிகிச்சை பெறவேண்டும். அவ்வாறே தேவை ஏற்பட்டால் காத்து, மூக்கு, தொண்டை மருத்துவரிடமும் சிகிச்சை பெறவேண்டும்.

உம்முல் முஃமீன் ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''நபி [ஸல்] அவர்கள் இரவிலோ பகலிலோ தூங்கினால் விழித்த உடன் ஒளுவுக்கு முன் மிஸ்வாக்கு  செய்வார்கள்.''
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

வாயை தூய்மையாக வைத்திருப்பதற்கு நபி [ஸல்] அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்தக் கூறினார்கள்..  ''எனது உம்மத்தினருக்கு சிரமம் ஏற்படாது என்றிருந்தால் ஒவ்வொரு தொழுகைக்கும் மிஸ்வாக்கு  செய்யும்படி அவர்கள் நான் ஏவியிருப்பேன்.''
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

அன்னை ஆயிஷா [ரலி] அவர்களிடம்  ''நபி [ஸல்] அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடன் எந்தக்  காரியத்தை முதன் முதலாகச் செய்வார்கள்? '' என்று கேட்கப்பட்டபோது, அன்னையவர்கள்  'மிஸ்வாக்கு '' என பதிலளித்தார்கள்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

மிஸ்வாக்கு  என்பது இஸ்லாமின் கௌரவச் சின்னமாக இருந்தும் சில முஸ்லிம்கள் இது விஷயத்தில் அலட்சியம் காட்டுவது வருந்தத்தக்க தாகும் .

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''வெங்காயம், பூண்டு, உள்ளியை சாப்பிட்டவர் நமது மஸ்ஜிதை நெருங்க வேண்டாம், ஏனென்றால், மனிதர்களுக்கு சங்கடம் ஏற்படுத்தும் விஷயங்களால் மலக்குகளும் சங்கடம் அடைகிறார்கள்.''
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் கெட்ட  வாடையுடைய சில காய்களை சாப்பிட்டவர்கள் மஸ்ஜிதுக்குள் நுழையத்  தடை விதித்தார்கள். அவர்களது துர்நாற்றம் வாடையால் மனிதர்கள், மலக்குகள் நோவினை அடையக்கூடாது என்பதுதான் தடைக்கு காரணமாகும்.

இஸ்லாம் மனிதர்களை எல்லா நிலையிலும் தூய்மையைப் பேணி நடக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. தூய்மையான நறுமணப் பொருட்களின் மூலம் உடலில் நறுமணம் கமழ  செய்வது அவசியமாகும். இதுவே நபி [ஸல்] அவர்களின் நடைமுறையாக இருந்தது.

அனஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள்..  ''நபி [ஸல்] அவர்களின் உடலிலிருந்து வெளியான நறுமணத்தைவிட அதிக நறுமணமுடைய கஸ்தூரியையோ அம்பரையோ  வேறெந்த நறுமணப் பொருளையோ நான் நுகர்ந்ததேயில்லை.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

தலைமுடி பற்றியும் நபி [ஸல்] அவர்களின் அழகிய வழிகாட்டுதல் உண்டு. அதை சீர்செய்து இஸ்லாம் கற்பித்த நெறியின் அடிப்படையில் அழகுபடுத்திக் கொள்ளவேண்டும்.
நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''எவருக்கு  முடி இருக்கிறதோ அதற்கு அவர் கண்ணியமளிக்கட்டும்.''
நூல் .. ஸூனன் அபூதாவூத்]

இஸ்லாமிய பார்வையில் முடியைக் கண்ணியப்படுத்துவது என்றால் அதைத் தூய்மைப்படுத்துவது, எண்ணெய் தேய்ப்பது, சீவிக்  கொள்வது மற்றும் அழகிய வடிவில் அதை பேணுவத்தைக் குறிக்கும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு   '' ஒரு முஸ்லிம்  அழகிய தோற்றமுடையவர்!''   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!