-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

முஸ்லிம் தனது இரட்சகனுடன் [முஸ்லிம் முன்மாதிரி]

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இஸ்லாம் ஒரு மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம்.  இஸ்லாம் ஒரு இறைமார்க்கமாகும். ஏகத்துவம் இதன் அடிப்படையாகும். வணக்க வழிபாடுகளும், சமூக நற்பண்புகளும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உலக மதங்களில்  கூறப்பட்டுள்ள நன்மைகள் அனைத்தும் முழுமையாக இஸ்லாமில் கூறப்பட்டுள்ளன. மனிதனின் வாழ்க்கைக்கு அவசியமான எந்தவொரு வழிகாட்டுதலையும் இஸ்லாம் விட்டுவிடவில்லை.

இஸ்லாமின் இறுதித் தூதர் முஹம்மது நபி [ஸல்] அவர்கள் இம்மார்க்கத்தை தனது வாழ்வில் கடைப்பிடித்ததுடன் இதைப்  பின்பற்றும் ஒரு சிறந்த சமுதாயத்தையும் உருவாக்கிக் காண்பித்தார்கள். அச்சமுதாயம், வாழ்வின் எல்லா நிலைகளிலும் இஸ்லாம் ஒன்றையே தனக்கு வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரி சமுதாயமாக விளங்கியது. மேலும், தங்களுக்கு ஏற்பட்ட எல்லா நிகழ்வுகளுக்கும் இஸ்லாம் ஒன்றையே தீர்வாகக் கண்டது. அவர்களது தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும், அவர்களது அரசாங்கத்திலும் இஸ்லாம் ஒன்றே ஆட்சி செய்தது.


விழிப்புணர்வுள்ள இறைநம்பிக்கையாளர் ........................
முஸ்லிமிடம் இஸ்லாம் விரும்பும் முதல் பண்பு அவர் அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப ஈமான்  கொண்டு , அவனுடன் உறுதியான உறவைக்  கொண்டிருத்தலாகும். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து, அவனை சதாவும் நினைவு கூர்ந்து காரணங்களைக் கையாள்வதுடன் , அல்லாஹ்விடம் உதவியும் தேட வேண்டும். அவன் எவ்வளவுதான் உழைத்தாலும் தனது உள்ளத்தின் ஆழத்தில் அல்லாஹ்வின் உதவி, உபகாரத்தின்பால் அனைத்து நிலையிலும் தேவையாகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மை முஸ்லிமின் இதயம் விழித்திருக்கும், அவரது அறிவுக்கண் திறந்திருக்கும். உலகில் அல்லாஹ்வின் படைப்பினங்களிலுள்ள  நுட்பங்களின்பால் அவர் தனது சிந்தனையைச் செலுத்துவார். இதனால் மறைந்திருக்கும் மகத்தான அல்லாஹ்வின் உதவிதான் இப்பிரபஞ்ச இயக்கத்தையும், மனிதர்களின் அனைத்து பிரச்சனைகளையும் எளிதாக்குகிறது என்று உறுதி கொள்வார். இதனால்தான் அல்லாஹ்வை எல்லா நிலையிலும் நினைவுகூர வேண்டியவராக இருக்கிறார். அவர் அல்லாஹ்வின் மகத்தான ஆற்றலை வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உணர்கிறார். இது அவரது வ ஈமானை பலப்படுத்துகிறது. அவன் மீதே நம்பிக்கைகொள்ள காரணமாக அமைகிறது.

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இத்தகையோர் [தங்கள்] நிலையிலும், இருப்பிலும் படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பத்தைச் சிந்தித்து எங்கள் இறைவனே!  நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை. நீ மிகத்  தூயவன்.[நரக ] நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக......
[அல்குர்ஆன்    3..190,191]

இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு .. இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிவார்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
உங்களுடைய விமர்சனம் வரவேற்கப்படுகிறது !!! அது எனக்கு ஊக்கமும், ஆர்வமும் தரும் என்று நினைக்கிறேன்.. குறைகளும் அல்லது தவறுகளும் இருப்பினும் அதை எமக்கு சுட்டிக் காட்டவும் அதை திருத்திக் கொள்வேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!