-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

தீய அண்டை வீட்டானும் அவனது கறுப்புப் பக்கமும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
தீய அண்டை வீட்டானும் அவனது கறுப்புப் பக்கமும்!

தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி [ஸல்] அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள் .

''அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்.
என நபி [ஸல்] அவர்கள் கூறியபோது, தோழர்கள்  ''அல்லாஹ்வின் தூதரே! அவர் யார்? என வினவினர் . நபி [ஸல்] அவர்கள்  ''எவருடைய  தீங்குகளிலிருந்து அண்டைவீட்டார் நிம்மதி பெறவில்லையோ  அவர்' என்று கூறினார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]


ஸஹீஹ் முஸ்லிம் மின் மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''

இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம்  தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? ஈமான் என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.

உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப்  புரிந்துகொண்ட தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்,, மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரியதுரதிஷ்டம் என்னவாக இருக்கமுடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இதயம் திடுக்கிட்டுவிடும்.

தீய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிந்து விடும்.

தீய குணமுடைய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிக்கப்பட்டு  விடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவரின் நற்கருமங்களுக்கு எப்பலனுமில்லை. ஏனெனில் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் என்ற தூணின் நிர்மாணிக்கப்படுகிறது. மேற்கண்ட சான்றுகள் அவனுக்கு ஈமான் இல்லை எனபதை உறுதிப்படுத்துகின்றன. ஈமானற்றவனின் எந்த நற்செயலையும் அல்லாஹ் ஒப்புக்கொள்ளாமல் அழித்துவிடுவான்  எனபது மிக்கது தெளிவான விஷயமாகும். அந்த நற்செயல்களுக்காக அவன் வாழ்வனைத்தையும் செலவிட்டிருந்தாலும் சரியே.

நபி [ஸல்] அவர்களிடம் வினவப்பட்டது.. 'அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண்மணி இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகலில் நோன்பு நோற்கிறார். தர்மமும் செய்கிறார். ஆனால் தனது நாவால் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்கிறார்.'' நபி [ஸல்] அவர்கள், ''அவளிடத்தில் எந்த நன்மையுமில்லை, அவள் நரகவாதி '' என்றார்கள். நபித்தோழர்கள், ''இன்ன பெண்மணி ஃபர்ளான தொழுகையை மட்டும் தொழுகிறாள். பாலாடைக் கட்டியை [மட்டும்] தர்மம் செய்கிறாள்,, ஆனால் எவருக்கும் நோவினையளிப்பதில்லை'' என்று கூறினார்கள். நபி [ஸல்] அவர்கள் , ''அவள் சுவனவாசி '' என்று கூறினார்கள்.
[நூல்.. அல் அதபுல்  முஃப்ரத் ]

தீய குணமுடைய அண்டை வீட்டானை ''மலடன் '' என நபி [ஸல்] அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''மூன்று நபர்கள் மலடர்களாவர் . 1] ஒரு தலைவன். நீ அவனுக்கு நன்மை செய்தால் நன்றி செலுத்தமாட்டான்,, [அந்த நன்மைக்குப் பிரதிபலனை அவனிடம் எதிர்பார்க்க முடியாது]  நீ தீங்கிழைத்தால் மன்னிக்கமாட்டான். 2] தீய குணமுடைய அண்டை வீட்டான் உன்னிடம் நன்மையைக் கண்டால் மறைத்து விடுவான்,, தீமையை கண்டால் பகிரங்கப்படுத்துவான் 3] மனைவி, நீ இருக்கும்போது உனக்கு நோவினையளிப்பாள் . நீ அவளிடம் இல்லாதபோது வீட்டாருக்கு  உமக்கு மோசம் செய்வாள்.''

நூல்.. முஃஜமுத்  தப்ரானி]

இந்த ஹதீஸின் மூலம் நபி [ஸல்] அவர்கள் விவரித்து போன்று கெட்ட  அண்டை வீட்டாரின் அருவருப்பான உருவம் இறையச்சமுள்ள முஸ்லிமின் சிந்தனையில் தோன்றியிருக்கும். எனவே அவர் தனது அண்டை வீட்டாருக்கு தீமை செய்வதிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!