-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 19 அக்டோபர், 2016

முஸ்லிம் தனது அண்டை வீட்டாருடன்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
முஸ்லிம்  தனது அண்டை வீட்டாருடன்..

அண்டை வீட்டாருடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்வார்!
மார்க்க நெறிகளை பேணி வரும் உண்மை முஸ்லிம் , தனது அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் உறவைப் பேணி அதிகமான உபகாரங்களையும் செய்து வருவார்.

உபகாரம் செய்வதில் இஸ்லாமிய வழிமுறையைப் பேணுவார்.

முஸ்லிம்  அண்டை வீட்டாருடன் சிறப்பான உறவைக்  கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. இஸ்லாமுக்கு முந்திய எந்தவொரு மதமும் இஸ்லாமிய வருகைக்குப் பின் உருவான எந்தவொரு அமைப்பும், சித்தாந்தமும் அறிந்திராத உன்னதமான வழியில் மனித உறவுகளைச்  சீரமைப்பதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது. அண்டை வீட்டாருடன் நடந்து கொள்ளும் முறையைப் பற்றி அருள்மறை பின்வருமாறு கூறுகிறது..

அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். [அவ்வாறே] உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், [எப்பொழுதும்] உங்களுடன் இருக்கக் கூடிய சிநேகிதர்களுக்கும், பிரயாணிகளுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் [அன்புடன்] நன்றி செய்யுங்கள். எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[அல்குர்ஆன் .. 4..36]


விளக்கம்*****

'அண்டை வீட்டிலுள்ள உறவினர்'' எனபது முஸ்லிமான அண்டை வீட்டார் அல்லது உறவினரான அண்டை வீட்டாரைக் குறிக்கும் . 'அந்நிய அண்டை வீட்டார்' என்பது முஸ்லிமல்லாத அல்லது உறவினரல்லாத அண்டை வீட்டுக்காரைக் குறிக்கும்.  ''உங்களுடன் இருக்கும் சிநேகிதர்களுக்கு'' என்பது நன்மையான விஷயங்களில் ஒன்றிணைந்திருக்கும் நண்பர்களைக் குறிக்கும்.

தனது இல்லத்திற்கு அருகில் இருப்பவருக்கும் அண்டை வீட்டார் என்ற உரிமை உண்டு. அவர் உறவினராகவோ, முஸ்லிமாகவோ  இல்லையென்றாலும் சரியே. அண்டை வீட்டாருக்கான இந்த கெளரவம் மனித நேயமிக்க இஸ்லாமின் அடிப்படையாகும்.

நபி [ஸல்] அவர்கள் இரத்த பந்தம் உள்ளதா, எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்காமல் பொதுப்படையாக அண்டை வீட்டாரைப் பற்றி உபதேசித்துள்ளார்கள் .

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''வாரிசுரிமையைக் கடமையாக்கி விடுவாரோ என்று நான் எண்ணுமளவு   அண்டை வீட்டாரைப் பற்றி ஜிப்ரீல் [அலை]  அவர்கள் எனக்கு உபதேசித்துக்கொண்டே இருந்தார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

இவ்வாறு உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கிய ஜிப்ரீல் [அலை] அவர்களின் நாவின் வழியாக அண்டை வீட்டாரை இஸ்லாம்  கண்ணியப்  படுத்தியுள்ளது. ஜிப்ரீல் [அலை] அவர்கள் இந்த விஷயத்தைத் தொடர்ந்து நபி [ஸல்] அவர்களுக்கு வலியுறுத்தி வந்ததால் நபி [ஸல்] அவர்கள், ஜிப்ரீல் [அலை] அவர்கள் அண்டை வீட்டாரை சொத்தில் வாரிசாவார் என நிர்ணயித்து விடுவாரோ என்று எண்ணினார்கள்.
முஸ்லிம்களுக்கு மிக அவசியமான விஷயங்கள் குறித்து உரையாற்றிய இறுதி ஹஜ்ஜூப்  பேருரையின்போதும் அண்டை வீட்டாரின் உரிமைகளைப்  பற்றி எடுத்துரைத்தார்கள். அபூ உமாமா [ரலி] கூறினார்கள்.. நபி [ஸல்] அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாஃ வில் தங்களது ஒட்டகையின் மீது அமர்ந்திருந்து கூறியதை நான் கேட்டேன். அப்போது  ''அண்டை வீட்டாரைப் பற்றி உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன்'' எனப் பலமுறை கூறினார்கள். அப்போது நான் அண்டை வீட்டாரை 'வாரிசாக ஆக்கிவிடுவார்களோ என எண்ணினேன்.

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வதும் அவர்களுக்கு இடையூறு செய்யாமலிருப்பதும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும்  ஈமான் கொண்டதற்கான அடையாளமாகும்.

நபி [ஸல்]  அவர்கள் கூறினார்கள்..  ''எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ  அவர் அண்டை வீட்டாருடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டாரோ அவர் பேசினால் நல்லது பேசட்டும் அல்லது மௌனம் காக்கட்டும். ''
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

புகாரி [ரஹ்] அவர்களின் மற்றொரு அறிவிப்பில் வருவதாவது, நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''எவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டாரோ அவர் அண்டை வீட்டாருக்கு நோவினையளிக்க வேண்டாம்.''

இன்ஷாஅல்லாஹ் இன்னும் இதன் தலைப்பில் தொடரும்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! ஓர் அழகிய தலைப்பில்  ''ஒரு முஸ்லிம்  தனது அண்டை வீட்டாருடன்  '' எப்படி நடந்து கொள்ளவேண்டும்..? தெளிவானமுறையிலும், அழகானமுறையிலும், புரிந்துகொள்ளும் அளவுக்கு,  திருமறை வசனத்துடனும் , அண்ணல் நபி [ஸல்] அவர்களின் பொன்மொழிகள்  ஆதாரத்துடன்  விளக்கமாக உங்களுக்கு தந்துள்ளேன்.. படிக்க தவறாதீர்கள்! மற்றவர்களுக்கு எத்திவைக்க மறக்காதீர்கள்! பெரும்பாலும் முஸ்லிம்கள் இந்த அண்டை வீட்டாருடன்  நடந்துக்கொள்ளும் முறையயை  அறியாமல் இருக்கிறார்கள்! அலட்சியமாகவும் ,  பெரிதாக பொருட்படுத்தாமல் இருக்கிறார்கள். இன்ஷாஅல்லாஹ் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விடயம்!      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!