-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

முன்னுரை [முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
ஒரு முஸ்லிம் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறதோ அத்தகைய பண்புகளை தெளிவுபடுத்துவதே இத்தலைப்பின் நோக்கம். [முன்மாதிரி முஸ்லிம் ]

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பிரகாசமும் தெளிவுமுள்ள ஒரு வேதம் [இப்போது] உங்களிடம் வந்திருக்கின்றது.

உங்களில் எவர்கள்  அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களை அதன் மூலமாக அல்லாஹ் சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகின்றான். அன்றி இருளிகளிலிருந்து வெளிப்படுத்தி தன்  அருளால் பிரகாசத்தின்பால் கொண்டு வருகிறான். தவிர, அவர்களை நேரான வழியில் செல்லும்படியும் செய்கின்றான்.
[அல்குர் ஆன் 5..15,16]


இன்றைய மனிதகுலம் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த முன்மாதிரியை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதைத்தவிர மனிதகுல மீட்சிக்கு வேறெந்த வழியுமில்லை. அதை பின்பற்றுவதைத் தவிர வேறெந்த முறையிலும் மனிதகுல மாண்புகளைக் காப்பாற்ற முடியாது. அத்தகைய பண்புகளின் மூலமாகத்தான் இஸ்லாமின் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

எனது இந்த முயற்சி மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடியதாகவும், பயன்பெறத்தக்கதாகவும், அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அமைய துஆ செய்தவனாகவும் , உங்களின் துஆவும் வேண்டும் என்பதை குறிப்பிடுகிறேன்..

பொருள்களோ மக்களோ பலனளிக்க முடியாது, தூய்மையான இதயத்துடன் அல்லாஹ்விடம் வருபவர்கள்தாம் வெற்றியடைவார்கள் என்று அல்லாஹ் வர்ணித்த அந்த மகத்தான மறுமைநாளின்  வெகுமதியாகவும் இதை எனக்கும், உங்களுக்கும் ஆக்கி அருளும் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறேன்..

முன்னுரை..கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!