-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வியாழன், 22 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் பெற்றோரின் நண்பர்களுக்கும் உபகாரம் செய்வார்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்............
ஒரு முஸ்லிம்  பெற்றோரின் நண்பர்களுக்கும் உபகாரம் செய்வார்.

பெற்றோருக்கு உபகாரம் செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களால் நேசிக்கப்பட்டவர்களிடமும் தூய்மையான  அன்பை வெளிப்படுத்த வேண்டுமென மார்க்கம் கட்டளையிடுகிறது.

நபி [ஸல்] அவர்கள் கூறியதாக இப்னு உமர் [ரலி]  அவர்கள் அறிவிக்கிறார்கள்..   ''உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்'' மற்றொரு அறிவிப்பில், ''நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது '' என்றார்கள்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்கள் தமது தந்தை உமர் [ரலி] அவர்களுடைய தோழர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவருக்கு அதிக மரியாதையும் உபகாரமும் செய்தார்கள். இப்னு உமர் [ரலி] அவர்களிடம் உடனிருந்தவர்   இம்மனிதருக்கு இரண்டு  திர்ஹம் கொடுத்திருந்தால் போதுமாகாதா ? என்று கேட்டார். இப்னு உமர் [ரலி] அவர்கள்  ''உன் தந்தையின் நண்பர்களை பேணிக்கொள்,, அவர்களது உறவை துண்டித்து விடாதே,, அப்படி துண்டித்தால் அல்லாஹ் உனது பிரகாசத்தை அணைத்துவிடுவான் ''என நபி [ஸல்] அவர்கள் கூறியதாக பதிலளித்தார்கள்.


ஸஹீஹ்  முஸ்லிம் ]

ஒரு மனிதர் நபி [ஸல்] அவர்களிடம்  ''அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் ஏதேனுமிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி [ஸல்] அவர்கள்  ''ஆம்!''  நான்கு விஷயங்கள் உள்ளன. 1] அவர்களுக்கு துஆ செய்வது அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2] அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3] அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4] இரத்த பந்துக்களுடன் இணைதிந்திருத்தல் . இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர ஏற்பட  முடியாது'' என்று கூறினார்கள்.
நூல் .. அல்  அதபுல் முஃ ப்ரத் ]

பெற்றோருக்கு கண்ணியம், உபகாரம் , நேசம் கொள்வதின் உன்னதமான அம்சம் என்னவெனில் பிள்ளைகள் தமது பெற்றோர்கள் இருக்கும்போதும் இறந்த பின்னும் அவர்களுடைய தோழர்களுடன் இணைந்திருக்கவேண்டும் என்பதுதான்.

உண்மை முஸ்லிம்  அவ்விருவரின் தோழர்களோடு தோழமையையும் அன்பையும் எல்லா நிலையிலும் உறுதிப்படுத்திக் கொள்வார். பெற்றோரின் மரணத்திற்கு பின்னும் அவர்களின் பழமையான நட்பை மறந்து விடமாட்டார். தமது அன்பிற்குரிய பெற்றோர் அமைத்துக் கொண்ட நட்பை துண்டித்து விடமாட்டார். இவ்வாறான மனிதநேய வெளிப்பாடுகளும் தூய நேசமும் வாழ்வை அழகுபடுத்தி மகிழ்ச்சியை உண்டாக்குகின்றன. இவையனைத்தும் இவ்வுலகில் உண்மையான முஸ்லிம்களால் மட்டுமே ஏற்படும் நன்மையாகும்.

இன்று சில பிள்ளைகள் . பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், உபகாரமும் மறந்து இருக்கக் கூடிய காலகட்டத்தில் வாழ்கிறோம்! இங்கனம் எப்படி பெற்றோர்களின் நண்பர்களுக்கு கண்ணியமும், உபகாரமும் செய்வது என்று சிலரின் மனதில் தோன்றலாம். இது என்ன புதிதாக இருக்கிறது என்று எண்ணலாம். இஸ்லாம் காட்டும் அருமையான வாழ்க்கை நெறிகள் பற்றிய நிலைப்பாடு  நிறைய முஸ்லிம்கள் அறிய வாய்ப்பு இல்லை.   கைசேதமாக தான் இருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!