-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 31 ஆகஸ்ட், 2016

கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவார்[கடமையான தொழுகை]

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
ஒரு முஸ்லிமுக்கு முதல் கடமை தொழுகை!  ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு , கலிமா ஷஹாதது கூறிய பிறகு , அவருக்கு, முதல் கடமை தொழுகைதான் ! பிறகுதான் மற்ற கடமைகள்...

உண்மை முஸ்லீம், இஸ்லாமின் அனைத்து கடமைகளையும் அலட்சியம், மறதி  மற்றும் குறைபாடுகள் எதுவுமின்றி பூரணமாக அழகிய முறையில் நிறைவேற்றவேண்டும்.

அவர் ஐந்து நேரத்  தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவார். ஏனெனில், தொழுகை மார்க்கத்தின் தூணாகும். அமல்களில் மிக உன்னதமானதாகும். அதை நிறைவேற்றுபவர் மார்க்கத்தை நிலை நாட்டுகிறார். அதை வீணடிப்பவர் மார்க்கத்தைத் தகர்த்தவராவார்.


இப்னு மஸ்வூது [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  நான் நபி [ஸல்] அவர்களிடம் , ''அமல்களில் சிறந்தது எது? என்று கேட்டேன் . நபி [ஸல்] அவர்கள் ''தொழுகை , அது உரிய நேரத்தில் [நிறைவேற்றுவது] என்று கூறினார்கள்.  ''பிறகு என்ன? '' என்றேன் . நபி [ஸல்] அவர்கள், பெற்றோருக்கு உபகாரம் செய்தல்'' என்று கூறினார்கள். ''பிறகு என்ன? என்றேன். ''அல்லாஹ்வின் பாதையில் போரிடுதல்'' என்று கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

தொழுகை சிறப்புடையக் காரணம் அது அடியானுக்கும்  அவனது இரட்சகனுக்குமிடையே தொடர்ப்பை ஏற்படுத்துகிறது . தொழுபவர் உலகின் அனைத்து ஈடுபாடுகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்கிறார். தனக்குரிய அனைத்தையும் இறைவனிடம் சமர்பிக்கிறார். தொழுகையின் மூலம் நேர்வழியையும் உதவியையும் பெற்றுக் கொள்கிறார். நேர்வழியில் மீது உறுதியாக நிலைத்திருப்பதை அல்லாஹ்விடம் வேண்டுகிறார்.

தொழுகை சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த அமலாக  இருப்பதில் வியப்பொன்றுமில்லை. அது முஸ்லிம்  தனது மறுமை பயணத்திற்காக இறையச்சம் என்ற கட்டுச் சாதத்தைத் தயார் செய்வதற்குரிய செழிப்பு மிக்க வழியாகும். அது தூய்மையான மதுரமான நீரூற்றாகும். அந்த தூய்மையான நீரால் முஸ்லிம்  தனது பாவங்களைக் கழுவிக் கொள்கிறார்.

அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''பெரும்பாவங்கள் நிகழாதவரை ஐந்து நேரத்  தொழுகைகள் அவைகளுக்கு மத்தியில் நிகழும் பாவங்களுக்கு பரிகாரமாகும். அதுபோன்றே ஒரு ஜூமு ஆ விலிருந்து மாரு ஜூமு  ஆவரை '' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ]

தொழுகையில் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகளை விவரிக்கும் நபிமொழிகளும், சம்பவங்களும், தொழுபவர்கள் அடைந்து கொள்ளும் நன்மைகளும் ஏராளம். அவை அனைத்தையும் குறிப்பிட [எழுத] இங்கே பக்கங்கள் போதாது..

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதை விட 27 மடங்கு மேலானதாகும். ''
ஸஹீஹுல் புகாரி

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஒரு முஸ்லிம்  அழகிய முறையில் உளூச்  செய்கிறார் பின் தொழுகையைத் தவிர  வேறெந்த நோக்கமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும். அவரது அந்தஸ்து [தரஜா ] ஒன்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது . அவர் தொழ  ஆரம்பித்தால்  மலக்குகள், ''இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக!'' என்று துஆச் செய்கிறார். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிரிபார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் ... அடுத்த தலைப்பு  தொழுகையாளிகளுக்கு சுவனச்  செய்தி  [தொழுகையின் சிறப்பு] 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!