-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 17 செப்டம்பர், 2016

முஸ்லிம் தனது பெற்றோருடன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
முஸ்லிம்  தனது பெற்றோருடன்

உண்மை முஸ்லிமின் தலையாயப்  பண்புகளில் பெற்றோருடன் உபகாரமாகவும் நன்றியுடனும் நடந்து கொள்வதும் ஒன்றாகும். இஸ்லாம் வலியுறுத்தும் மிக முக்கியக் கடமைகளில் பெற்றோருக்கு உபகாரம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உறுதியான ஆதாரங்கள் உள்ளன. மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்  அல்லாஹ்வின் வேதம் மற்றும் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களை வழிகாட்டியாக கொள்ளவேண்டும். அவையனைத்தும் பெற்றோருடன் உபகாரமாகவும் அழகிய உறவுடனும் நடந்துகொள்ள வலியுறுத்துகிறது.

அவர்களது அந்தஸ்தையும், அவர்களுக்கான கடமையையும் அறிவார்..

வேறெந்த மதத்திலும் இல்லாத, மனிதகுலம் கண்டிராத உயரிய அந்தஸ்தை பெற்றோருக்கு இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. அல்லாஹ்வை ஈமான் கொள்வதற்கும், அவனை வணங்குவதற்கும் அடுத்ததாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதை இஸ்லாம் அமைத்துள்ளது. அல்லாஹ்வின்  திருப்திக்குப் பிறகு பெற்றோரின் பொருத்தத்தை இணைத்து திருக்குர்ஆனில்  பல வசனங்கள் காணக்கிடைக்கின்றன.


அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள்.
அல்குர்ஆன்.. 4..36]

உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது.

பெற்றோரின் மாண்புகளைத் தெளிவுபடுத்தி பெற்றோரின் விஷயத்தில் முஸ்லிம்  பின்பற்றவேண்டிய நடைமுறைகளை திருக்குர் ஆன் விவரிக்கிறது. அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ இருந்து, வயோதிகத்தின்  பலவீனத்திற்கு இலக்காகி இருந்தால் அவர்களுக்கு மனிதகுலம் கண்டிராத கௌரவத்தை இஸ்லாம் வழங்குகிறது.

[நபியே!] உமதிறைவன் தன்னைத்தவிர [மற்றெவரையும்] வணங்க கூடாதென்றும் [கட்டளையிட்டிருப்பதுடன்] தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான் . அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை அடைந்துவிட்டபோதிலும் உம்மிடமிருந்து அவர்களை வெருட்டவும் வேண்டாம், அவர்களை [நிந்தனையாக] 'சீ 'சீ என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் [எதைக்  கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி] மிக்க மரியாதையாக [வும் அன்பாக] வுமே பேசும்.
அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபோது [மிக்க அன்பாக] என்னை அவர்கள் வளர்த்து, பரிபாலித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக!
[அல்குர்ஆன் .. 17..23,24]


பெற்றோருக்கு உபகாரம் செய்வதைப்பற்றி வந்துள்ள ஆதாரங்களை சிந்திப்பவர் இறைவசனங்களை தொடர்ந்து பல நபிமொழிகளை காணமுடியும். அவர்களுக்கு உபகாரம் செய்யத் தூண்டியும்,எக்காரணமாக இருப்பினும் நோவினையையும் மாறுசெய்வதையும் தவிர்க்குமாறு அவை வலியுறுத்துகின்றன.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நான் நபி [ஸல்] அவர்களிடம்  ''அல்லாஹ்வுக்கு உவப்பான அமல் எது?'' என்று கேட்டேன். நபி [ஸல்] அவர்கள்  ''தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். ''பின்பு என்ன? என்று கேட்டேன். நபி [ஸல்] அவர்கள் ''பெற்றோருக்கு உபகாரம் செய்வது'' என்றார்கள் . பின்பு என்ன? என்று கேட்டேன். நபி [ஸல்] அவர்கள் ''[ஜிஹாது] அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது'' என்றார்கள்.
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்வதை, தொழுகை மற்றும் இறைவழியில் போரிடுவது என்ற இரு மகத்தான கடமைகளுக்கு மத்தியில் குறிப்பிட்டார்கள். தொழுகை மார்க்கத்தின் தூணாகும் . 'ஜிஹாது இஸ்லாமின் பெருமைமிகு அமலாகும்.

ஆகவே நபி [ஸல்] அவர்கள் பெற்றோர்களுக்கு உபகாரம்செய்வதை இவ்விரண்டிருக்கும் இடையில் கூறியதிலிருந்து அதற்கு எத்தகு உயரிய அந்தஸ்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து அடுத்த பகுதியை பார்க்கலாம்.. இதே தலைப்பில் பகுதி இரண்டு  என்று வரும்.. 
அல்லாஹ் மிக்க அறிந்தவன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!