-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வெள்ளி, 14 அக்டோபர், 2016

முஸ்லிம் தனது உறவினர் , இரத்த பந்துக்களுடன் தொடர் 1

அல்லாஹ்வின் திருப்பெயரால்........
முஸ்லிம்  தனது உறவினர் , இரத்த பந்துக்களுடன் ....

உண்மை முஸ்லிமின் உதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் உறவினர் மற்றும் இரத்த பந்துக்களையும்  உள்ளடக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுடன் உதவியும் உபகாரமும் நல்லுறவும் பேணப்பட வேண்டும்.  'அர்ஹாம்' என்பவர்கள், மனிதனுடன் பரம்பரை உறவின் மூலம் இணைக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர் வாரிசுரிமையைப் பெறுவார்கள். சிலர் பெறமாட்டார்கள்.

இரத்த பந்துக்களுக்கு இஸ்லாம் தரும் கண்ணியம்

இஸ்லாம் இரத்த பந்துக்களுக்கு அளிக்கும் கண்ணியமும் கௌரவமும் மனிதகுலம் எந்த மதங்களிலும் அறிந்திராத ஒன்றாகும்  ஆகவே இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தி, இரத்த பந்துக்களை துண்டிப்பதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

இரத்த பந்துக்களைப்  பேணுவத்தைப்  பற்றிய நபி [ஸல்] அவர்களின் பின்வரும் கூற்று இதற்கு மிகச் சிறந்த ஆதாரமாகும்.


நபி [ஸல்] அவர்கள் கூறியதாக  அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''அல்லாஹு தஆலா படைப்பினங்களைப்  படைத்தான். அவைகளை படைத்து முடித்தபோது அல்லாஹ்விடம் இரத்த பந்தம் நின்று, ''இது உறவை துண்டிப்பதிலிருந்தது உன்னிடம் பாதுகாப்புக்  கோருபவர்  நிற்கும் சமயமாகும்'' என்று கூறி மன்றாடியது. அல்லாஹ் ''ஆம் ! உன்னை சேர்த்துக் கொள்பவர்களை நான் சேர்த்துக் கொள்வேன்,,  உன்னைத் துண்டிப்பவர்களை நான் துண்டித்துக் கொள்வேன் என்பதை நீ பொருந்திக் கொள்கிறாயல்லவா ? என்று கூறினான். அதற்கு இரத்த பந்தம் 'ஆம்! '' [நான் பொருந்திக் கொண்டேன்] என்றது அல்லாஹ் '' அது உனக்குரியதாகும்'' என்று கூறினான்.
 பின்பு நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. நீங்கள் விரும்பினால் ஓதிக்  கொள்ளுங்கள். ''நயவஞ்சகர்களே ! நீங்கள் [யுத்தத்திற்கு வராது ] விலகிக்கொண்டதன் பின்னர் நீங்கள் பூமியில் சென்று விஷமம் செய்து உங்கள் இரத்த பந்துக்களைத் துண்டித்துவிடப் பார்க்கின்றீர்களா?  இத்தகையோரை அல்லாஹ் சபித்து அவர்களைச்  செவிடர்களாக்கி, அவர்களுடைய பார்வைகளையும் போக்கி குருடர்களாக்கிவிட்டான்.
[அல்குர்ஆன்..47..22,23] நூல்கள்.. ஸஹீஹுல்  புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ] 

இரத்த பந்துக்களின் அந்தஸ்தை உறுதிப்படுத்தும் பல வசனங்கள் திருக்குர்ஆனில்  உள்ளன. அவர்களுக்கு உபகாரம் செய்வது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது , அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும், அந்தக் கடமைகளில் குறைகளை ஏற்படுத்தி உறவினருக்கு அநீதியிழைப்பதிலிருந்து தவிர்ந்துகொள்ள  வேண்டுமெனவும் திருக்குர் ஆன் வலியுறுத்தி  கூறுகிறது.

...ஆகவே, அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து [நடந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே  [நீங்கள் உங்களுக்குள்] ஒருவருக்கொருவர் [வேண்டியவற்றைக்] கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் [அல்லாஹ்வுக்குப் பயந்து] இரத்தக்கலப்பு  பந்தத்துவத்திற்கும் [மதிப்பளியுங்கள்]
[அல்குர்ஆன்.. 4..1]

இரத்த பந்தத்தின் மகத்துவத்தை உணர்த்தவும்  அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவும் அதை இறையச்சத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சி பிறகு பார்ப்போம்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் இந்த தலைப்பின் சமந்தமான நிறைய விஷயங்கள் நாம் அறிய வேண்டும்!  உறவை சேர்த்து வாழ்பவர்கள், அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கிட்டும் நலவுகள் பற்றியும், உறவை துண்டிப்பவர்கள் அவர்களுக்கு  கிடைக்கும் தண்டனைகளும் பற்றியும்  குரான் வசனங்களும், நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் பொன்மொழிகளை காணலாம்.. தொடர் 1  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!