-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 12 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் தாராளமாகச் செலவிடுவார் ....

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  தாராளமாகச் செலவிடுவார் ....

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது இயற்கையாகக் காட்டும் அன்பும் பரிவும் மட்டும் போதுமானதல்ல. சில நேரத்தில் வாழ்வில் சிரமமும் நெருக்கடியும் வறுமையும் ஏற்படும்போது பிள்ளைகளை மறந்து விடலாம் . அவர்களுக்கு ஏற்படும் செலவினங்களை எண்ணி மனம் சோர்வடையலாம். இக்காரணத்தை முன்னிட்டுத்தான் பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு மகத்தான நன்மை உண்டு என்று இஸ்லாம் உற்சாகமூட்டுகிறது. அல்லாஹ் வழங்கும் நன்மையை எண்ணும்போது  பிள்ளைகளுக்காக சிரமத்தை சகித்துக் கொள்வதும் தியாகம் செய்வதும், அதனால் ஏற்படும் சோதனையும் பெற்றோர்களுக்கு சுலபமாகிவிடுகின்றன.

உம்மு ஸலமா [ரலி] அவர்கள் கூறினார்கள்.. நான் நபி [ஸல்] அவர்களிடம்  'அல்லாஹ்வின் தூதரே! ஸலமாவின்  பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதற்கு எனக்கு நற்கூலி உண்டா? நான் அவர்களை இவ்வாறு [வீணாக] விட்டுவிட முடியாது. ஏனென்றால் அவர்கள் எனக்கும் குழந்தைகள்'' என்று கூறினேன். நபி [ஸல்] அவர்கள்  ''ஆம் ! நீ அவர்களுக்குச் செலவிடுவதில்  உனக்கு நற்கூலி உண்டு'' என்று கூறினார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]


அபூ மஸ்வூத் அல்பத்ரி [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''ஒரு மனிதர் தனது குடும்பத்தாருக்கு அல்லாஹ்வின் திருப்தியை நாடி செலவிடுவாரானால் அது அவருக்கு தர்மமாகும்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

மேலும் ஒருவர் தனது குடும்பத்தினருக்காகச் செலவிடுவதை செலவுகளிலெல்லாம் மிகச் சிறந்த செலவாக இஸ்லாம் கூறுகிறது. இதற்கான முன்னுதாரணத்தை நபிமொழியில் காண்கிறோம்.

நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''நீ அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட தீனார், அடிமையை உரிமை விடுவதற்காகச் செலவிட்ட தீனார், ஏழை ஒருவனுக்காகச் செலவிட்ட தீனார், உனது குடும்பத்துக்காகச் செலவிட்ட தீனார், இவை அனைத்திலும் மிக மகத்தான நன்மை பெற்றது உனது குடும்பத்தினருக்காகச் செலவிட்ட தீனார் ஆகும்.
[நூல்.. ஸஹீஹுல் புகாரி]

ஸஹீஹ் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில்.. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''மனிதன் செலவிடும் தீனார்களில் மிகச் சிறந்து தனது குடும்பத்தினருக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் வாகனத்துக்காகச் செலவு செய்யும் தீனாரும், அல்லாஹ்வின் பாதையில் தனது தோழர்களுக்காகச் செலவு செய்யும் தீனாரும் ஆகும்''.

முஸ்லிம்  தனது குடும்பத்தினருக்குச் செலவிடுவதில்  அளவற்ற ஆனந்தம் அடைவார். தனது குடும்பத்தினருக்காகவோ அல்லது பிறருக்காகவோ அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி செலவிடும்போது அதற்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை வழங்குவான். எந்தளவுக்கென்றால் ஒரு மனிதர் பாசத்துடன் தனது மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டுவாரானால் அதிலும் அவருக்கு நற்கூலி உண்டு.

ஸஃது இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்களிடம் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீர் ஒன்றை செலவிட்டால் நிச்சயமாக   தற்கு நற்கூலியைப் பெறுவீர். உமது மனைவியின் வாயில் ஊட்டிவிடும் ஒரு கவள  உணவிற்காகவும் நன்மை அளிக்கப்படுவீர்.''
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

முஸ்லிம்  தனது குடும்பத்தினரை விட்டு விலகி அவர்களை துன்பத்திலும் பசியிலும் வாடும் நிலையில் விட்டு விடக்கூடாது. குடும்பத்தினரின் நியாயமான தேவைகளைப்  புறக்கணிக்கும் ஆண்களை கடுமையான தண்டனையைக் கொண்டு எச்சரித்து நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''தான் உணவளிக்க வேண்டியவர்களை வீணடிப்பது ஒரு மனிதனுக்கு பாவத்தால் போதுமானதாகும்.''
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

கருத்து**
தன்னுடைய பிள்ளைகள், குடும்பம் என்று தனது ஆதரவில் வாழ்ந்து வருபவர்களை அலட்சியப்படுத்தி, அவர்களை சிரமத்தில் விட்டுவிடுவது ஒரு பெரும் குற்றமாகும்.  ''பாவத்தால் போதுமானது''    என்பதற்கு பொருள், அல்லாஹ்வின் கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளாக இந்தப் பாவமே போதுமானது என்பதாகும்.  
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! அன்பான குடும்ப தலைவர்களே! இஸ்லாம் மார்க்கம் நமக்கு எவ்வளவு அருமையாகவும், அற்புதமாகவும் வழிகாட்டுகிறது! அப்படி வாழச் சொல்கிறது.  ஒருவர் தன்னுடைய குடும்பத்துக்காக செலவிடுவது பற்றி அச்சம் கொள்ள வேண்டாம் ! அதற்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவான். ஒருவர் தன்னுடைய குடும்பத்துக்காக கஞ்சத்தனம் செய்வார் என்றால், அவருக்கு கடுமையான [அதாவது உணவளிக்க வேண்டியவர்களை வீணடிப்பது ] அது பற்றி நபிமொழி எச்சரிக்கிறது! அது ஒரு பெரிய குற்றமாக இருக்கிறது . படிக்க தவறாதீர்கள்! மற்றவர்களுக்கு எத்திவைக்க மறக்காதீர்கள்! அப்படி ஒருவர் யாராவது படித்து திருத்திக் கொண்டு ''ஒரு நல்ல முஸ்லிமாக வாழ்ந்தால் ,  அதன் நற்கூலி உங்களுக்கு கிட்டும் என்பதை ஐயம் இல்லை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!