-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஒரு முஸ்லிம்  விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்!

குழந்தையின் தாயும், தந்தையும் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் தூய்மையான, மென்மையான உள்ளத்தினுள் ஊடுருவிச் சென்று அக்குழந்தையின்பால் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையில்  மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

முஸ்லிம்  தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேட வேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழக  வேண்டும். அவர்களது வயது அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச்  செய்து அக்குழந்தைகளின் இதயங்களுக்கு மகிழ்வான அன்பான வார்த்தைகளைக் கூறவேண்டும். நேசம், மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிற்பந்தம்  என்ற அடிப்படையில் கட்டுப்படுவதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது நிரந்தரமான அடிபணித்தல், இரண்டாவது கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மை உடைய தற்காலிக அடிபணித்தலாகும்.


சிலர், பெற்றோர் பிள்ளைகளுடன்  எளிமையான முறையில் கலந்துறவாடினால் அது தங்களின் ஸ்தானத்துக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவார்ந்த பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத்  தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும் ஏற்றுக் கொள்கின்றன . இதை நபி [ஸல்]  அவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தியுள்ளார்கள் .

நபி [ஸல்] அவர்கள் , அப்பாஸ் [ரலி] அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்யிற் [ரலி] ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து ''எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு  இன்னின்ன கிடைக்கும்'' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி [ஸல்] அவர்களிடம் ஓடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி [ஸல்[ அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள்.
நூல்.. முஸ்னத் அஹ்மத்]

இமாம் புகாரி [ரஹ்] அவர்கள் தனது  ' அல்  அதபுல்  முஃபிரத் என்ற நூலிலும் இமாம் தப்ரானி [ரஹ்] தனது முஃஜம்' என்ற நூலிலும் அபூஹுரைரா [ரலி] அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் ஹசன் அல்லது ஹூஸைன்  [ரலி] அவர்களின் கரத்தை பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு  ''நீ மேலே ஏறு '' என்று கூறினார்கள்.

மகத்தான போதனையாளரான நபி [ஸல்] அவர்கள் ஹஸன் - ஹூஸைன்  [ரலி] அவர்களைச்  சுமப்பதிலும்  பாசத்தைப் பொழிவதிலும் நேசிப்பதிலும் காட்டிய நடைமுறைகள்,  பெற்றோர்களுக்கு பாட்டனார்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.  தாங்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடன் மதிப்புடன் இருந்தாலும் அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் ஹதீஸிலிருந்து மிகத்  தெளிவாகத் தெரிகிறது.

ஷத்தாத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் ஹசன் அல்லது ஹுஸைனைச்  சுமந்தவாறு வந்தார்கள். முன்னால்  வந்து நின்று கீழே இறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது சிறுவர் நபி [ஸல்] அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்கு திரும்பி விட்டேன். நபி [ஸல்] அவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது நபி [ஸல்] அவர்களிடம் தோழர்கள் வினவினர் . ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே! [காரணமென்ன?] '' நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''எனது மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை''.
நூல்.. ஸூனனுன் நஸாயீ]

முஸ்லிம்  தங்களது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்புக்  கிட்டும்போதெல்லாம் அப்பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டவேண்டும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!