-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 15 அக்டோபர், 2016

முஸ்லிம் தனது உறவினர், இரத்த பந்துக்களுடன் தொடர் 2

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
முஸ்லிம்  தனது உறவினர், இரத்த பந்துக்களுடன் தொடர் 2]

அல்லாஹ்வை விசுவாசிப்பது  பெற்றோருக்கு உபகாரம் செய்வது ஆகிய இவ்விரண்டு கடமைகளுக்குப் பின் இரத்த பந்துக்களுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆனின் பெரும்பாலான வசனங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

[நபியே!] உமதிறைவன் தன்னைத் தவிர [மற்றெவரையும்] வணங்க கூடாதென்று [கட்டளையிட்டிருப்பதுடன்] தாய், தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கின்றான் - [அல்குர் ஆன் .. 17..23]

இதை அடுத்து சில வசனங்களுக்குப் பின்,

பந்துக்களுக்கும் , ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்துவரவும். [செல்வத்தை] அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்.
[அல்குர்ஆன்.. 17..26]


அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள். [அவ்வாறே] உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும், [எப்பொழுதும்] உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் [அன்புடன் நன்றி செய்யுங்கள்] எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
[அல்குர்ஆன்.. 4..36]

இத்திருவசனத்தில் பெற்றோருக்கும் உபகாரம் செய்வதற்கு அடுத்ததாக உறவினர்களில் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மனித உறவுகளை சீர்படுத்துவதில்  மேலிருந்து படிப்படியாக கீழே  கொண்டுவரும் திருக்குர்ஆனின்   கண்ணோட்டமாகும். பெற்றோருக்கும், நெருங்கிய உறவினருக்கும் உபகாரம் செய்து, பின்பு மகத்தான மனித வாழ்வில் தேவையுடைய அனைத்து அங்கத்தினருக்கும் உபகாரம் செய்ய வேண்டுமென ஏவப்பட்டுள்ளது. முதலில் மிக நெருங்கியவர்களுக்கு  உபகாரம் செய்வதையே மனம் விரும்பும் என்ற மனித இயல்புக்கேற்ப இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் ஒவ்வொருவரும் வரிசையாக கொண்டு வரப்பட்டுள்ளார்கள். சமூகத்திற்கான உதவியை, முதலில் குடும்ப வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு உறவு வட்டத்தினுள் இருப்பவர்களுக்கும், பிறகு சமூகத்தில் உள்ளவர்களுக்கும் செய்யவேண்டுமென விரிவாக்கப்படுகிறது. மனித வாழ்வை இன்பமானதாகவும் அழகானதாகவும் இவவரிசைமுறை அமைத்து தருகிறது.

இரத்த பந்துக்களை நேசிப்பது மிக முக்கியமான இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். நபி [ஸல்] அவர்கள் ஏகத்துவ பிரசாரத்தை  ஆரம்பித்தது, இப்புனித மார்க்கத்தை உலகில் பரவச்  செய்த காலத்திலிருந்தே இதுபெறும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. அது மார்க்கத்தின் மாண்புகளை வெளிப்படுத்துவதாகவும், சிறந்த போதனையாகவும் அமைந்துள்ளது.

இதற்கு அபூ சுஃ ப்யான்  [ரலி] அவர்களிடம் மன்னன் ஹிர்கல் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆதாரமாகும். அவர் அபூ சூஃபியானிடம்  ''உங்கள் நபி எதை ஏவுகிறார்?'' என்று கேட்டதற்கு  'அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனுக்கு யாதொரு இணையும்  வைக்கக்கூடாது, எங்கள் மூதாதைகள் சொல்லிக் கொண்டிருந்ததை விட்டுவிட வேண்டுமென்றும், தொழுகை, வாய்மை, ஒழுக்கம், உறவினரோடு இணைந்து வாழ்வது ஆகிய நற்குணங்களையும் எங்களுக்கு ஏவுகிறார்''என அபூ ஸூஃப்யான்  [ரலி] பதிலளித்தார்கள்.

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சி பிறகு பார்ப்போம்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!