-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 18 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் உறவைப் பேணுவார்..

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
ஒரு முஸ்லிம்  உறவைப் பேணுவார்..

உண்மை முஸ்லிம்  தமது இரத்த பந்துக்கள் தன்னுடைய உறவைப் பேணாமல் விலகிச் சென்றாலும் அவர்களுடன் உறவைப் பேண  வேண்டும். உறவைப் பேணுவதில் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், மேன்மைக்குரிய இஸ்லாமியப்  பண்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம் , தன்னைப் போன்றே அவர்களும் உறவைப் பேணுபவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமின் மனிதநேயப்  பண்புகளை வெளிக்காட்டும் விதமாக அந்த மஸ் லும்  எல்லாக் காலங்களிலும் இரத்த பந்துக்கள் மற்றும் ஏனைய உறவினர்களின் உறவைப் பேணி நடப்பார்.

நபி [ஸல்] அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.. ''பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் [உண்மையில்]உறவைப் பேணுகிறவர் அல்லர், மாறாக உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.''
நூல்.. ஸஹீஹுல் புகாரி]


தீமையையும் வன்நெஞ்சத்தையும் கொண்டு உறவுகளைத் துண்டித்து வாழும் இரத்த பந்துக்களுடன் மேன்மையையும், மன்னிப்பையும் பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தி இணைந்திருப்பவர்களையும் நபி [ஸல்] அவர்கள் மிகவும் புகழ்ந்தார்கள். இரத்த பந்துக்கள் இணைந்து வாழ மறுத்தாலும் அவர்களைச்  சேர்ந்து வாழ்பவர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இரத்த பந்தத்தைத் துண்டித்து நன்மையை மறக்கும் கல்நெஞ்சக்காரர்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவர்கள் என்பதையும் நபி [ஸல்] அவர்கள் சித்தரித்துக் காட்டினார்கள்.

ஒரு மனிதர் நபி [ஸல்] அவர்களிடம் கூறினார்..  ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்த்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார்.  அதற்கு நபி [ஸல்] கூறினார்கள்..  ''நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால்  அவர்களைச்  சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

கவனித்துப் பாருங்கள்! உறவுகளைத் துண்டித்து வாழும் கல்நெஞ்சக்காரர்களுடன் பொறுமையை மேற்கொண்டு, இணைக்கமாக இருப்பவருக்கு அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்கிறான்.
 அவர்களால் ஏற்படும் துன்பங்களைச்  சகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறான். அந்த மனிதநேயமிக்க உயர்வான பண்புகளில் அவரை ஸ்திரப்படுத்துகிறான். நபி [ஸல்] அவர்கள் பாவத்தில் மூழ்கிய  அந்த வன்நெஞ்சக்காரர்களைச்   சுடும் சாம்பலைத் தின்பவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியது எவ்வளவு அற்புதமான உவமானம்?

உண்மை முஸ்லிம்  எல்லா நிலையிலும் தனது உறவினர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.  இந்த இணக்கத்தின்  மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். உறவினரிடம்  இருந்து அவ்வப்போது நிகழும்      தவறுகள் , மூடத்தனங்கள் பொருட்படுத்தாதிருக்க வேண்டும். அவர்களிடம் ஏற்படும்  அலட்சியம் மற்றும் சிறு குறைகளைப்  புறக்கணித்துவிட வேண்டும்.

ஏனெனில், ''இரத்த பந்தம் என்பது அர்ஷூடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும்.'எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' [ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ] என்ற நபி [ஸல்] அவர்களின் கூற்றைச் செவியுறும் உண்மை முஸ்லிம்  உறவினர்களின் இதுபோன்ற மூடத்தனமான, அற்பத்தனமான செயல்களைப்  பொருட்படுத்தாமல் அவர்களுடன் நேசமாக நடந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு  ''முஸ்லிம்  தனது அண்டை வீட்டாருடன்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!