-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 1 அக்டோபர், 2016

முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

அல்லாஹ்வின் திருப்பெயரால்......
முஸ்லிம்  தனது பிள்ளைகளுடன் ********
குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.

மேற்கூறிய அனைத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின்  ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம்  உண்மையில் மனித அலங்காரமாகத் திகழ முடியும்.


அல்லாஹ் அவர்களைப்  பற்றி தனது திருமறையில் வர்ணிக்கிறான்..
பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே .
அல்குர்ஆன்.. 18..46]

இதனால்தான் நபி [ஸல்] அவர்கள் தனது பிரியத்திற்குரியவருக்கு பின்வருமாறு துஆ செய்தார்கள்.

அனஸ் [ரலி] அவர்கள் கூறுகிறார்கள்.. அவர்களும் அவர்களது தாயும், தாயின் சகோதரியும் நபி [ஸல்] அவர்களிடம் சென்றார்கள் . நபி [ஸல்] அவர்களுக்கு தொழ  வைத்த பின் எல்லா நலவு களையும் வேண்டி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனஸ் [ரலி] அவர்களின் தாயார் கூறினார்கள்..  ''இறைத்தூதரே ! உங்களது குட்டி பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்'' . நபி [ஸல்] அவர்கள் அனஸ் [ரலி] அவர்களுக்காக எல்லா நலவுகளையும் வேண்டி துஆச் செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் 'யா அல்லாஹ்! அவருடைய செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி அவருக்கு பரக்கத் செய்வாயாக!'' என்று கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

பெற்றோர், குழந்தை வளர்ப்பில் அவர்களைச்  சிறந்த முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவதிலும் அசட்டையாக இருந்தால் அக்குழந்தைகள் சோதனையாக, கவலையாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோருக்கு தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும் தான் பரிசாகக் கிடைக்கும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
உங்களின் பிள்ளைகளின் விஷயத்தில் தயவு செய்து அசட்டையாகவும், அலட்சியமாகவும் இருக்காதீர்கள்! பிறகு உங்களுக்கு அவர்கள் ஒரு பெரிய சோதனையாக ஆகிவிடுவார்கள். முன்மாதிரி முஸ்லிம்  கட்டுரைகளை தவறாமல் படித்து பலன் பெறுங்கள்!  இன்ஷாஅல்லாஹ் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்பதில் ஒரு துளிக்  கூட ஐயம் இல்லை. தயவு செய்து அல்லாஹ்வுக்காக மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! அல்லாஹ் அருள் புரிவான்.  நீங்கள் ஒரு நன்மையான விஷயத்தை சிபாரிசு செய்து , யாரவது ஒருவர் அதன்படி அமல் செய்தால்,  அவருக்கு  கிடைக்கும் நற்கூலியைப் போன்று உங்களுக்கும் கிடைக்கும். இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்!  
http://muslim-life-model.blogspot.com/2016/10/model33.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!