-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 1 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் மனைவியை செம்மையாக நிர்வகிப்பார் [தொடர 2]

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  மனைவியை செம்மையாக நிர்வகிப்பார் [தொடர 2]

இன்ஷாஅல்லாஹ் இதன்  தொடர்ச்சியைப் பார்ப்போம்..
ஆணுக்குப் பெண் மீது அதிகாரம் உள்ளது, கணவனுக்குக்  கட்டுப்பட்டு அவனை திருப்திப்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் ரமலான் அல்லாத காலங்களில்  கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக்  கூடாது என்றும், அவனது அனுமதியின்றி எந்தவொரு விருந்தினரையும் அனுமதிக்கக்  கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''கணவன் தன்னுடன்  இருக்கும்போது அவனது அனுமதியின்றி நோன்பு நோற்க பெண்ணுக்கு அனுமதியில்லை. கணவனின் வீட்டில் அவனது அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கலாகாது.
நூல். ஸஹீஹுல் புகாரி]


குடும்பத்தை பாதுகாத்து நேர்வழியின்பால் அழைத்துச் செல்வார் என்பதால்தான் இஸ்லாம் ஆணுக்கு பெண்ணை நிர்வாகிக்கும் உரிமையைக் கொடுத்திருக்கிறது. மேலும் பெண்களால் ஏற்படும் குழப்பங்களுக்கு ஆண்கள் ஆளாகிவிடக்கூடாது எனக் கடுமையாக இஸ்லாம் எச்சரிக்கிறது. அப்படி அவர்கள் பெண்களின் குழப்பங்களுக்கு ஆளாகும்போது அவர்களது கண்கள் குருடாகி , வீரத்தை இழந்து மார்க்கத்தில் பலவீனமடைந்து, நேரிய பாதையிலிருந்து தவறி விடுகிறார்கள். இறுதியில் கடிவாளம் அவர்களது காய் நழுவி, வழி  தவறிய பெண்ணின் கட்டுப்பாட்டுக்குள் குடும்பம் சிக்குண்டு விடுகிறது. பின்பு அவளது பேச்சை மறுக்க முடியாத, அவளது கட்டளையை மீரா முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இதைப்  பற்றி நபி [ஸல்] அவர்கள் மிகத்  தெளிவாக முன்னுரைத்தார்கள்.

''எனது மரணத்திற்குப் பின் பெண்களால் ஏற்படும் சோதனைதான் ஆண்களுக்கு மிக இடையூறாக இருக்கும் .
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

முஸ்லிம்  தனது வழி  தவறிய மனைவியின் எந்தவொரு குழப்பத்திற்கும் அடிபணிந்திடமாட்டார். அவள் குழப்பத்தை ஏற்படுத்தினால் அறிவுநுட்பத்துடன் அதை எதிர்கொண்டு அன்பு மனைவியின் தீமையைக் கண்டிப்பார். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கே அவர் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு மனிதன் தனது மனைவியை எவ்வளவுதான் நேசித்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதற்கு அடுத்ததாகத்தான் அமைய வேண்டும்.

[நபியே!] விசுவாசிகளை நோக்கி நீர் கூறும்..  உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய மக்களும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் உங்கள் பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து மிக எச்சரிக்கையுடன் செய்து வரும்  வர்த்தகமும், உங்களுக்கு மிகக்  விருப்பமுள்ள உங்கள் வீடுகளும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விடவும், விருப்பமானவைகளாயிருந்தால் நீங்கள் உண்மை விசுவாசிகளல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்பார்த்திருங்கள். இது போன்ற பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை.
அல்குர்ஆன்.. 9..24]

தங்களை முஸ்லிம்களென வாதிக்கும் பலருடைய இல்லங்களில் காணப்படுவது போன்று முரண்டு பிடிக்கும் பெண்களை உண்மை முஸ்லிமின் இல்லங்களில் காண இயலாது  . சிந்திக்க வேண்டிய ஒரு அழகான இறைவசனம்...

ஒருவர் தனது மனைவியை அல்லது சகோதரியை அல்லது மகளை  அரைகுறை ஆடையுடன் தலையைத் திறந்து போட்டவளாக, நெஞ்சுப் பகுதியை மறைக்காமல் வெளியேறிச் செல்வதைக் காணுகிறார். இஸ்லாமின் ஒழுக்கப் பண்புகளும் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலை மாற்றுவதற்குரிய முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர் ஆணுக்குரிய வீரத்தை  இழந்து மார்க்கத்திலிருந்து விலகி அல்லாஹ்வின் கோபத்துக்கு இலக்காகி விட்டார் என்பதுதான் பொருளாகும்.  கண்டிக்காமலிருந்த குற்றத்திற்காக உண்மையான பாவமன்னிப்புக் கோருதலைத் தவிர வேறெந்த பரிகாரமும் அவருக்கு இருக்க முடியாது.

இஸ்லாம் பெண்களுக்கென சில ஒழுக்க மாண்புகளையும்  தனித்தன்மையான தோற்ற அமைப்பையும் அமைத்துள்ளது. மஹ்ரம் அல்லாத அந்நிய ஆண்களிடையே செல்வதற்கோ அல்லது வீட்டிலிருந்து வீதிக்கு வருவதற்கோ அவள் அணிந்து கொள்ள வேண்டிய ஆடைகளை நிர்ர்ணயித்துள்ளது. அதுதான் முஸ்லிம்  பெண்களுக்குரிய ஹிஜாப்'' பர்தா என்று சொல்லப்படும் ஆடையாகும்.
இன்ஷாஅல்லாஹ் இதன் இறுதி பகுதியை பிறகு அடுத்த இதழில் பார்ப்போம்...
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!