-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

முஸ்லிம் ஜகாத்தை நிறைவேற்றுவார் [முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

அல்லாஹ்வின் திருமறையில் அதிகமான இடத்தில் கூறப்பட்ட வசனங்கள் எது என்றால் '' தொழுகையைப் பற்றியும், ஜகாத்தை பற்றியும் தான் .

இன்னும் இவர்கள் தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தையும் கொடுத்து வருகின்றனரோ...........                       [அல்குர்ஆன் .. 5..55]

நீங்கள் தொழுகையைக் கடைபிடித்து தொழுகுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.                                            [அல்குர்ஆன்..2..43]

எவர்கள்  விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச்  செய்து தொழுகையைக் கடைப்பிடித்தும் ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ............
[அல்குர்ஆன்.. 2..277]



முஸ்லிம்  ஜகாத்தை நிறைவேற்றுவார். ஜகாத் அவர் மீது கடமையானால் அதை இறையச்சத்துடனும் நேர்மையுடனும் கணக்கிட்டு மார்க்க நெறியின்படி உரியவர்களுக்கு கொடுத்து நிறைவேற்றுவார். தொகை ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் அவர் மீது கடமையானாலும் அதன் ஒரு பகுதியைத் தடுத்து வைத்துக் கொள்வதற்கான எந்த முயற்சியிலும் இறங்காமல் பூரண திருப்தியுடன் அதை நிறைவேற்றுவார்.

ஜகாத் என்பது நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரம் சம்பந்தப்பட்ட ஒரு வணக்கமாகும். உண்மை முஸ்லிம்  மார்க்கம் தெளிவுபடுத்தியதை போன்று பூரணமாக ஜகாத்தை நிறைவேற்றுவதில் அலட்சியம் செய்யமாட்டார். பலவீனப்பட்டு ஈமானும் குறுகிய இதயமும் உடையவருக்கு மட்டுமே ஜகாத்தைப் பூரணமாக வழங்குவதில் சிரமம் இருக்க முடியும். அத்தகையோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜகாத்தை பூரணமாக நிறைவேற்றுவரை அவர்களுடன் போரிட்டு அவர்களது உதிரத்தை பூமியில் ஓட்ட மார்க்கம் அனுமதிக்கிறது.

முதலாவது கலீஃபா அபூபக்கர் ஸித்தீக்  [ரலி] அவர்கள் மார்க்கத்தை முழுமையாக ஏற்காது தடுமாறிக் கொண்டிருந்தவர்களிடம் கூறியது ஏனென்றால் நினைவுகூரத் தக்கதாகும்.  ''அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகைக்கும் ஜகாத்துக்கும் மிடையே பிரித்துப் பார்ப்பவனோடு நிச்சயமாக நான் போரிடுவேன்''.

தொழுகை மற்றும் ஜகாத்துக்குமிடையே உள்ள உறுதியான தொடர்ப்பை மிக ஆழமாக அறிந்ததனால்தான் அபூபக்கர் ஸித்தீக்  [ரலி] அவர்கள் இவ்வாறு சாத்தியமிட்டார்கள். திருமறையின் பல வசனங்களில் தொழுகை ஜகாத் இணைத்தே கூறப்பட்டுள்ளன.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு.. ''நோன்பின் சிறப்புகள்'' அவசியம் எல்லோரும் அறிந்துக் கொள்ளவேண்டிய விடயங்கள்.. ரமலான் நோன்பு, சுன்னத்தான நோன்பு, நஃபிலான  நோன்பு பற்றி விளக்கமாக காணலாம்....      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!