-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வியாழன், 1 செப்டம்பர், 2016

தொழுகையாளிகளுக்கு சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்..[தொழுகையின் சிறப்பு]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.........

தொழுகைப் பற்றியான தொடர்ச்சியை இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்...
காலை அல்லது மாலை நேரங்களில் மஸ்ஜிதுக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழுவதில்  ஆர்வமுடையவர்களுக்கு நபி [ஸல்] அவர்கள் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறியுள்ளார்கள்.

''எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்  என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி , ஸஹீஹ் முஸ்லிம் ]

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில்  பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ்   இப்னு மஸ்வூது [ரலி]  அவர்கள் கூறினார்கள்..  ''எவருக்கு  கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு  சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி [ஸல்] அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.''

பின் தங்கியவன் [முனாஃபிக் ] தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாஃ    பிக்  [நயவஞ்சகர்] தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.''
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதுகளில் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்கள். நியாயமான காரணமின்றி ஜமாஅத்தை  விடுபவரை வீட்டுடன் சேர்த்து எரித்துவிட கருணைக்கடலான நபி [ஸல்] அவர்கள் விரும்பினார்கள்..

''எவனுடைய கரத்தில் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நான் விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு, பிறகு தொழுகைக்கான 'அதான்'  சொல்ல ஏவி, பிறகு ஒரு மனிதரை இமாமாக நிற்க உத்தரவிட்டபின் நான் ஜமாஅத் தொழுகைக்கு வராதவர்களிடம் சென்று அவர்களை வீட்டுடன் சேர்த்து எரித்திட விரும்புகிறேன்'' என்று கூறினார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

இதற்குப் பிறகும் இமாம்  சயீதுப்னுல் முஸய்யிப்  [ரஹ்] போன்ற வர்களை காண்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. அவர்கள் முப்பதாண்டு காலமாக மஸ்ஜிதில் எவருடைய பிடரியையும்  பார்த்ததேயில்லை. அவர்கள் பாங்கு  சொல்லப்படும் முன்பே முதல் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாறு ஸயீது  [ரஹ்] போன்ற பல உதாரணங்களை கண்டிருக்கிறது.

''அதான்' சப்தத்தைக் கேட்டவுடன் நபித்தோழர்கள் மஸ்ஜிதுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற, அவர்களது இல்லங்கள் வெகுதூரமாக இருந்தது அவர்களுக்கு தடையாக அமையவில்லை. அவர்கள் ஜமாஅத்துடன் தொழுகைக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள். அவர்கள் மஸ்ஜிதுக்குச் செல்லும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இறைவனிடம் நன்மையாகக் கணக்கிடப்படுகிறது என்பதை அறிந்திருந்ததால் மஸ்ஜிதிலிருந்து தங்களது இல்லங்கள் வெகு தொலைவிலிருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்தார்.

உபை இப்னு கஅப் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. அன்சாரிகளில் ஒருவர் இருந்தார் . நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத்  தொழுகைக்கும் இமாம் ஜமாத்தை தவறவிட மாட்டார்.  அவரிடம், ''நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க  உதவியாக இருக்குமே!  என்று கூறப்பட்டதுபோது அவர் கூறினார்..  ''நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென    விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி [ஸல்] அவர்கள், ''[உமக்கு நீர் விரும்பும்]  அது அனைத்தையும் ஒன்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!'' என்று கூறினார்கள்.
நூல்.. ஸஹீஹ் முஸ்லிம் ]

நபி  [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிரி பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்தது கொள்வார்.
நூல் ..ஸஹீஹுல் புகாரி]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு .......''ஃபஜ்ரு மற்றும் இஷா தொழுகையின் சிறப்புகள்! பார்ப்போம்........... [இது முன்மாதிரி முஸ்லிம்  ]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!