-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

முஸ்லிம் தனது பெற்றோருடன் [பகுதி 2] ஒரு அழகான சம்பவம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முஸ்லிம் தனது பெற்றோருடன் [பகுதி 2] ஒரு அழகான சம்பவம் ]

ஸஃது இப்னு அபீவக்காஸ் [ரலி] அவர்கள் இஸ்லாமை தழுவியதை தாயார் ஏற்க மறுத்து  ''நீ இஸ்லாமை விட்டு விலகி வரவேண்டும். இல்லையென்றால் நான் மரணிக்கும்வரை உணவருந்த மாட்டேன்,, தாயைக் கொன்றவன் என்ற அரபிகளின் அவச்சொல்லுக்கும் கோபத்துக்கும் நீ இலக்காகுவாய்'' என்று கூறினார். அதற்கு ஸஃது [ரலி] அவர்கள்  ''அறிந்துகொள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உமக்கு நூறு உயிர்கள் இருந்து அது ஒவ்வொன்றாக பிரிந்தாலும் [நூறுமுறை மரணமடைந்தால்] எனது மார்க்கத்திலிருந்து விலகமாட்டேன் '' என்று பதிலளித்தார். தாய் ஒரிரு  தினகங்ளாக  சாப்பிடாமல் இருந்துவிட்டு மூன்றாவது நாள் பசியை பொறுத்துக்கொள்ள முடியாமல் உணவருந்தி விட்டார். அப்போது ஒரு திருவசனத்தை  இறக்கி அதை முஸ்லிம்களுக்கு ஓதிக்காட்டுமாறு தனது தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். அதில் ஸஃது [ரலி]  அவர்கள் தனது தாயிடம் கடுமையான முறையில் பதிலளித்ததைக் கண்டித்திருந்தான்.


எனினும் [இறைவன் என்று] நீ அறியாததை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால், [இவ்விஷயத்தில்] நீ அவ்விருவருக்கும் வழிப்பட  வேண்டாம். ஆயினும் இவ்வுலகத்தில் [நன்மையான காரியங்களில்] நீ அவ்விருவருடன் அன்புடன் ஒத்துவாழ் -
அல்குர்ஆன் .. 31..15]

நாம் இந்த வசனத்தை ஆழமாக சிந்திக்கவேண்டும்.  ஸஃது [ரலி] அவர்கள் நடந்துக்கொண்டு முறையை அல்லாஹ் கண்டித்து வசனம் இறக்கியுள்ளான் என்றால் . நம்மில் சிலர் அவர்களுடைய பெற்றோர்களை எப்படி நடத்துகிறார்கள் , மனைவி பேச்சை கேட்டு , பெற்றோர்களை நோவினை செய்யும் பிள்ளைகள் . அவர்களுடைய நிலையை நினைத்து பாருங்கள்!

ஜுரைஜ் என்ற வணக்கசாலியின் சம்பவத்தில் பெற்றோருக்கு  வழிப்படுவதன்  முக்கியத்துவம் குறித்து அற்புதமான படிப்பினை உண்டு.

ஒரு நாள் ஜுரைஜ் தொழுதுகொண்டிருக்கும்போது அவரது தாயார் அழைத்தார். ஜுரைஜ்  'இறைவனே! எனது தாயா? எனது தொழுகையா? என்று எண்ணிவிட்டுத் தொழுகையைத் தேர்ந்தெடுத்தார். இரண்டாவதாக அழைத்தபோது பதிலளிக்காமல் தொழுது கொண்டிருந்தார். மூன்றாவதாக அழைத்தபோது அவர் பதிலளிக்காதலால் அவரது தாய் அவர்மீது கோபமாக  ''விபச்சாரியின் முகத்தைப் பார்க்காத வரை அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்யாதிருக்கட்டும் '' என்று சாபமிட்டுவிட்டார்.

சில காலங்களுகளுக்கு பின் ஒரு பெண், ஆட்டிடையன் ஒருவனுடன் விபச்சாரம் செய்து கர்ப்பமடைந்தாள் . தனது தவறு வெளியாகி விடுமென்று அவள் அஞ்சியபோது அந்த ஆட்டிடையன் அவளிடம்  ''உன்னிடம் எவரேனும் குழந்தைக்குத் தந்தை யாரென்று கேட்டால், வணக்கசாலியான ஜுரைஜ் என்று கூறிவிடு '' என்றான். அவளும் அவ்வாறே கூறிவிட்டாள். இதையறிந்த மக்கள் ஜுரைஜின் வணக்கஸ்த்தலத்தை உடைத்தெறிந்தனர். அதிகாரிகள் அவரைக் கைது செய்து செய்து தண்டனை நிறைவேற்றப்படும் மைதானத்திற்கு இழுத்து வந்தனர். வரும் வழியில் தனது தாயின் துஆ நினைவுக்கு வந்து அவர் சிரித்தார் . தண்டனைக்காகத் தயாரானதுபோது இரண்டு ரக்அதுக்கள் தொழ  அனுமதி கேட்டார்.

பின்பு அந்தக் குழந்தையை வாங்கி காதின் அருகில் மெதுவாக ''உன் தந்தை யார்? என்று கேட்டார். குழந்தை ''எனது தந்தை இன்ன ஆட்டிடையன்'' என்று கூறியது. உடனே கூடியிருந்த மக்கள் தக்பீர் தஹ்ளீல்  கூறி ''நாங்கள் உங்களது வணக்கஸ்த்தலத்தை தங்கத்தாலும் வெள்ளியாலும் கட்டித்  தருகிறோம்'' என்றார்கள். அவர்  ''வேண்டாம் முன் போலவே மண்ணால் அமைத்துக்கொடுங்கள் என்று கூறிவிட்டார்.

நபி [ஸல்] அவர்கள்  ''ஜுரைஜ் மார்க்கத்தை விளங்கியவராக இருந்திருந்தால் தொழுகையை நீண்ட நேரம் தொடர்வதைவிட தாய்க்கு பதிலளிப்பது அவசியம் என்பதை  அறிந்திருப்பார்'' என்றார்கள் .
நூல்.. ஸஹீஹுல் புகாரி]
இதனால்தான் அறிஞர்கள் கூறுகிறார்கள்.. ஒருவர் நஃபிலான [உபரியாக] தொழும்போது பெற்றோர்களில் ஒருவர் அழைத்தால் தொழுகையை முறித்துவிட்டு அழைப்பை ஏற்கவேண்டும்.

என்ன அன்பு சகோதர/சகோதரிகளே! இந்த ஹதீஸை விட நமக்கு ஒரு அழகான படிப்பினை தரும்  வேறு ஏதாவது இருக்கிறதா?
மனைவி பேச்சை கேட்டு பெற்றோர்களை மனம் நோவினை செய்வது. பெற்றோர்கள் பேச்சை கேட்டு மனைவியை கஷ்ட்டப்படுத்துவது. இருவரும் இரு கண்கள் ! ஒரு மனிதனுக்கு இரண்டு கண்களும் அவசியம்! ஒரு முஸ்லிம்  எப்படி நடந்துக் கொள்ளவேண்டும் பெற்றோர்களிடம். மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதை ஒரு உண்மையான இறையச்சமுள்ள  ஈமான் உறுதி  உள்ள  ஒரு முஸ்லிம்  நன்கு அறிந்திருப்பார்.  நல்லவிதமாக நடந்து கொள்வார். அவருக்கு அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிட்டும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!