-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஹதீஸில் கூறப்பட்ட துஆக்களை அதிகமாக ஓதி வருவார்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஹதீஸில் கூறப்பட்ட துஆக்களை அதிகமாக ஓதி வருவார் 
அல்லாஹ்வுடன் தனது இதயத்தை இணைத்து  தனது ஆத்மாவை பலப்படுத்திக்கொள்ள விரும்பும் முஸ்லிம் , ஒவ்வொரு செயலைச் செய்யும்போது நபி [ஸல்] அவர்கள் கற்றுக்கொடுத்த துஆக்களை [பிரார்த்தனைகளை] அதிகமதிகம் ஓதிக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும்போது, உள்ளே நுழையும்போது, பிரியாணியை வழியனுப்பி வைக்கும்போது, அவரை வரவேற்கும்போது, புத்தாடை அணியும்போது, படுக்கைக்கு செல்லும்பது, தூக்கத்திலிருந்து விழிக்கும்போது என ஒவ்வொரு செயலுக்கும் நபி [ஸல்] அவர்கள் துஆக்களை கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

இந்த துஆக்களின்  மூலமாக நபி [ஸல்] அவர்கள் தனது உள்ளத்தில் 'அல்லாஹ் நடுநிலையை உதிக்கச் செய்து, வழிதவறுவதிலிருந்து  பாதுகாத்து தனக்கு நன்மையை தரவேண்டும்'' எனப் பிரார்த்தித்து எல்லா நிலையிலும் அல்லாஹ்வையே முன்னோக்கியவர்களாக இருந்தார்கள்.


இது குறித்த விரிவான விளக்கங்கள் ஸஹீஹான ஹதீஸ் நூல்களில் காணப்படுகின்றன. நபி [ஸல்] அவர்கள் தமது தோழர்களுக்கு துஆக்களை கற்றுக்கொடுத்து அவைகளுக்குரிய  நேரங்களில் ஓதி வருமாறு ஏவினார்கள்.

இறையச்சமுள்ள முஸ்லிம்  நபி [ஸல்] அவர்களையும் நபித்  தோழர்களையும் பின்பற்றும் வகையில் இவ்வாறான துஆக்களை கற்றுக் கொள்வதில்  ஆர்வம் காட்டவேண்டும். இயன்றளவு அதனை ஓதிவர  வேண்டும்.  இதயம் பரிசுத்தமடைகிறது . ஆன்மா தெளிவடைகிறது. அல்லாஹ்வுடன் எல்லா நிலைகளிலும் இதயம் இணைந்து கொள்கிறது.

இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைக் கொண்டுதான் நபி [ஸல்] அவர்கள் தங்களது தோழர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார்கள். ஆகவே அவர்களது இதயங்கள் தூய்மையாகவும் மாசு மருவற்றதாகவும்  இருந்தன. அதில் அசுத்தங்களோ, அழுக்குகளோ, கசடுகளோ இருக்கவில்லை. மனிதகுலத்தில்  தனித்தன்மைவாய்ந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதில் மகத்தான இஸ்லாமின் அற்புத ஆற்றல் அந்த நபித்தோழர்கள் மூலம் வெளிப்பட்டது.

கடந்த காலங்களைவிட தற்காலத்தில் உண்மை முஸ்லிம்கள் இதுபோன்ற ஆன்மா பயிற்சியில் ஈடுபடுவது மிக அவசியம். அப்போது தான் அவர்கள் தங்களது அழைப்புப் பணியில் ஈடுபடும்போது அவர்களை எதிர்கொள்ளும் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு  ''முஸ்லிம்  தனது பெற்றோருடன்'' 
ரொம்ப முக்கியமான தலைப்பு படிக்காமல் இருந்துவிடாதீர்கள்! 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!