-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

வியாழன், 15 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் வணக்கங்களால் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்வார்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
ஒரு முஸ்லிம்  வணக்கங்களால் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்வார் ...

உண்மை முஸ்லிம்  தனது ஆன்மாவுக்கும் பொறுப்பாளி என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் உடல், அறிவை கொண்டு மட்டும் படைக்கப்படவில்லை. மாறாக, தன்னிடமுள்ள உள்ளம், உயிர், ஆன்மாவையும் அறிந்திருப்பார். ஆன்மாவை பரிசுத்தப்படுத்த வேண்டுமென்ற ஆசைதான் வணக்க வழிபாட்டிற்கு தூண்டுகோலாகவும் அல்லாஹ்வின் அருளை அடைய வழிகாட்டியாகவும் அவனது வேதனையிலிருந்து தப்பிக்க கேடயமாகவும் அமைகின்றன.


முஸ்லிம்  தனது ஆன்மாவை கவனிக்க வேண்டும். இரவு பகலின் பல பகுதிகளில் வணங்குவதன் மூலமும் இறைதியானத்தின் மூலமும் ஆன்மாவை பிரகாசிக்கச் செய்ய வேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிகளையும், அழிவை உண்டாக்கும் அவனது ஊசலாட்டங்களையும் பயந்து அது குறித்து எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தனது பலவீனமான சந்தர்ப்பங்களின் ஏதேனும் ஒரு வினாடியில் ஷைத்தானின் தீண்டல்கள் ஏற்பட்டு, நினைவுகள் தடுமாறினான்  அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும்.

நிச்சயமாக எவர்கள்  [அல்லாஹ்வுக்கு] பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய [தவறான] எண்ணம் ஊசலாடினால் அவர்கள்  [அல்லாஹ்வை] நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய [அறிவுக் ] கண் திறந்து விழிப்படைந்துவிடுகிறது.
அல்குர்ஆன்.. 7..201]

இது குறித்து நபி [ஸல்] அவர்கள் தனது தோழர்களிடம்  ''உங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறியபோது தோழர்கள்,  ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எவ்வாறு எங்களது ஈமானை புதுப்பித்துக் கொள்வது? என்று கேட்டார்கள். அதற்கு நபி [ஸல்] அவர்கள்  'லா இலாஹ  இல்லல்லாஹ் என்ற கலிமாவை [கூறுவதை] அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
முஸ்னத் அஹ்மத்]

முஸ்லிம்  தனது ஆன்மாவை பலப்படுத்துவதற்கு, சீர்படுத்துவதற்கும் பல வணக்க வழிபாடுகளை மேற்கொள்வார். திருமறையை நிதானமாக சிந்தித்து இறையச்சத்துடன் ஓதுவார். உளஓர்மையுடன் , பணிவுடன் அல்லாஹ்வை திக்ரு செய்வார். அதுபோல் நிபந்தனைகளைப்  பேணி உள்ளச்சத்துடன் தொழுகைகளை நிறைவேற்றுவார். இதுபோன்ற ஏனைய ஆன்ம பயிற்சிகளையும் மேற்கொள்வார்.

இதன்மூலம் வணக்க வழிபாடுகள் பிரவிக்  குணங்களாகவும்  பிரிக்க முடியாத இயற்கை  பண்புகளாகவும் இவரிடம் வேரூன்றிக் கொள்ளும். எந்நேரமும் தனிமையிலும் கூட்டத்திலும் அல்லாஹ்வை நினைத்த வராகவும் அல்லாஹ்வை அஞ்சியவராகவும் காட்சியளிப்பார்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! உங்களிடம் ஓர் பணிவான அன்பான வேண்டுகோள்! நீங்கள் படித்துவிட்டு அல்லாஹ்வுக்காக மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.  இதனால் உங்களுக்கு நிறைய பலன்கள்  கிட்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!