-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 14 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் தனது சிந்தனையை விரிவுபடுத்துவார்

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ஒரு முஸ்லிம்  தனது சிந்தனையை விரிவுபடுத்துவார்
விழிப்புணர்வுடைய முஸ்லிம்  தனக்கு அவசியமானதே மட்டுமே அறிந்தவராக இருக்கக்கூடாது. மாறாக , அறிவு மற்றும் சிந்தனையின் கதவுகளை அகலத்  திருந்துவைத்திருக்க வேண்டும். கலாச்சாரம், பண்பாடுகள், இலக்கியம் மற்றும் பயனுள்ள கலைகள் , பலதரப்பட்ட கல்வி ஞானங்களை உள்ளடக்கிய நூல்களையும் படிக்கவேண்டும். குறிப்பாக தான் சார்ந்திருக்கும் துறை சம்மந்தமான விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் பலதரப்புகளிலிருந்தும் மனதுக்கு உற்சாகமளித்து ஞானத்தை விரிவுபடுத்தும் விஷயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்,, சிந்தனைத்திறனும் அதிகரிக்கும்.


பிறமொழியை ஆழ்ந்து அறிவார்.
சில சந்தர்ப்பங்களில் அந்நிய மொழிகளின் தேவை ஏற்படுவதால் அதற்கென்று உள்ள முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது. தற்காலிக இஸ்லாமிய வாழ்வின் தேவைகளை நன்கு விளங்கி முஸ்லிமுக்கு கல்வி ரீதியாக மற்றொரு மொழியை அறிந்துகொள்வது மிக அவசியமாகும்.

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமுக்கு பரிசுத்த மார்க்கத்தின் வழிகாட்டுதல்களில் பிறமொழிகளை அறிந்துகொள்ள ஆற்வம் காட்ட வேண்டும் என்பது ஒன்றாகும்.  நபி [ஸல்] அவர்கள், பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள தனது தோழர்களுக்கு உத்தரவிட்டுருந்தார்கள்  முஸ்லிம்கள் அகிலத்தார் அனைவரையும் நேர்வழியின்பால் அழைக்க வேண்டுமென்ற அல்லாஹ்வின் ஆணையை செயல்படுத்துவதில் பிறமொழிகளைக் கற்பது உதவியாக அமையும். இதன் முன்மாதிரியை வரலாற்றில் காண்கிறோம்.

ஜைது இப்னு ஸாபித் [ரலி] அவர்கள் கூறுகிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் என்னிடம்  ''ஜைதே ! நீர் யூதர்களின் மொழியை கற்றுக் கொள்ளும்! அல்லாஹ்வின் மீதாணையாக யூதர்கள் எனக்காக கடிதம் எழுதுவதை நான் நம்பமாட்டேன்'' என்றார்கள். நான் பதினைந்து நாட்களில் அதைக் கற்று மிகவும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். நபி [ஸல்] அவர்கள் யூதர்களுக்கு ஏதேனும் கடிதம் எழுத வேண்டியதிருந்தால் அதை நான் எழுதுவேன். நபி [ஸல்] அவர்களுக்கு யூதர்கள் கடிதம் எழுதினால் நான் படித்துக் காட்டுவேன்.''
நூல்.. ஸூனனுத் திர்மிதி]

தற்கால முஸ்லிம் , தான் வாழும் சூழலுக்கேற்ப வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் சில அந்நிய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான தேவை தற்காலத்தில் முந்திய காலத்தைவிட அதிகமாக உள்ளது.  தனது சமுதாயம், கலாச்சாரம் சம்மந்தப்பட்ட ஏற்றத்தாழ்வு குறித்து பிறமொழி புத்தககங்களை படித்து ஆராய்ச்சி செய்யவேண்டும். அதன் மூலமே அவர் இந்த சமுதாயத்தை தீங்கிலிருந்து பாதுகாக்கும் கோட்டையாகவும்  அதற்கு நன்மை பயக்கும் பேச்சாளராகவும் இருப்பார்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!