-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 14 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் -அவரது அறிவு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக்  கடமையாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம்  உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக்  கடமையாகும்.
நூல்.. ஸூனன் இப்னு மாஜா]

கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக்  கடமையாகும். இறுதி மூச்சுவரை முஸ்லிம்  கல்வியைத் தேடவேண்டும்.


கல்வியைத் தேடுவதில் முஸ்லிம்  ஆர்வம்கொள்ள போதுமான காரணம், அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்த்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான், இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் [அறிவுடைய] கல்விமான்கள்தாம்.
அல்குர்ஆன் .. 35..28]

பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும். அவர்கள்தான் இப்பிரபஞ்சத்தை படைத்து வாழவைத்து பிறகு [மறுமையில்] உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஆற்றலையும் புரிந்து கொள்ளமுடியும். அல்லாஹ் அந்த அறிஞர்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மைப் படுத்துகிறான்.

[நபியே!] நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? [இந்த குர்ஆனைக்  கொண்டு] நல்லுபதேசம் பெருவோரெல்லோரும்  [கல்வி] அறிவுடையோரே .
அல்குர்ஆன்.. 39..9]

ஸஃப்வான் இப்னு அஸ்ஸால்  அல்  முராதி [ரலி] நபி [ஸல்] அவர்களிடம் வந்தார். நபி [ஸல்] அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர்   ''இறைத்தூதரே ! நான் கல்வியைத் தேடி வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி [ஸல்] அவர்கள்  ''கல்வியைத் தேடுபவரை நான் வரவேற்கிறேன் . கல்வியைத் தேடுபவர்களை மலக்குகள் தங்களது இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வானம்வரை கூடிவிடுகின்றார்கள். வானவர்கள் அவர் தேடும் கல்வியின் மீது கொண்ட அன்பினால் இப்படி சூழ்ந்து கொள்கிறார்கள்'' என்று கூறினார்கள்.
நூல்கள்.. முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரகுல்ஹாகிம் ]

கல்வியின் மாண்புகள் மற்றும் அதைத்தேடுவதில் ஆர்வமூட்டும் சான்றுகள் பல உள்ளன. உண்மை முஸ்லிம்  கற்பவராக அல்லது கற்றுக்கொடுப்பவராக இருப்பார். மூன்றாவதாக இருக்கமாட்டார்.

இன்று நம்மிடத்தில் மார்க்க கல்வி இல்லாதிதனால் , தொழுகை, நோன்பு , ஜகாத்  இன்னும் போன்ற அமல்களில் நாம் சரியான முறையில் செய்யமுடியவில்லை.  நம்மிடத்தில் நிறைய தவறுகள் ஏற்படுகின்றன. மூடநம்பிக்கைகளும், மார்க்கத்தில் இல்லாத செயல்களும் தாம் இன்று சிலரிடம்  முக்கியத்துவமாக இருக்கிறது. கல்வியைத் தேடுபவர்கள் குறைவாக இருந்தாலும். அதிகம் குழப்பம் ஏற்படுத்துபவர்கள்தாம் அதிகம் என்று கூறலாம்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!