-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

திங்கள், 5 செப்டம்பர், 2016

அல்லாஹ்விடம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்துவார்.[முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இவ்வுலகில் தனக்கு அருளப்பட்ட அனைத்தும் தனது இரட்சகனை வணங்குவதற்காகத்தான் என்பதில் முஸ்லிம்  உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பர்.

[எனக்கு வழிப்பட்டு] என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன் ..52..56]

இப்பிரபஞ்சத்தைச் செழிப்பாக்குவதிலும் , புவியில் அல்லாஹ்வின் ஏகத்துவ கலிமாவை உறுதிப்படுத்துவதிலும், வாழ்வில் இஸ்லாமியா நெறிமுறையைக் கொண்டுவருவதில் அவன் எடுக்கக்கூடிய ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான முயற்சியிலும் அல்லாஹ்வை வணங்குவதே அவனது நோக்கமாக இருக்க எவ்ண்டும். நாம் அல்லாஹ்வை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்க வேண்டும். அடக்கியாளும் எகனாகிய அல்லாஹ்விடம் மனிதன் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி தனது அனைத்து செயலிலும் அவனது திருப்தியையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். இறைவழியிலேயே தனது செயல்கள் அனைத்தும் அமைந்துள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.


முஸ்லிம்  செய்யும் இறைவணக்கங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்புவியில் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவதும் அவனது வழிமுறையை வாழ்வில் பின்பற்றுவதும்தான். இவ்வாறு தனிமனிதரின் குடும்பம், சமூகம், நாடு என வாழ்க்கையின் அனைத்திலும் அல்லாஹ்வின் மார்க்கமே ஆட்சி செய்ய வேண்டும்.

மனிதஇனம் மற்றும் ஜின் வர்க்கத்தை எந்த இலட்சியத்துக்காக அல்லாஹ் படைத்தானோ, அந்த மகத்தான இலட்சியத்தை உறுதி படுத்துவதில் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் தனது இறைவணக்கங்கள் குறையற்றதாக அமையும் என்பதை முஸ்லிம்  உணர்ந்துகொள்ள வேண்டும். மனித, ஜின் வர்க்கத்தை அல்லாஹ் படைத்தது[இஃலாவு கலிமதில்லாஹ் ] புவியில் அல்லாஹ்வின் கலிமாவை உயர்ந்துதோங்கச்  செய்வதற்காகத்தான். ஏனெனில் அதன்மூலமே  மனிதகுலம் அல்லாஹ்வை வணங்குகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும்.

[எனக்கு வழிப்பட்டு] என்னை வணங்குவதற்கன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன்.. 52..56]
இதுதான் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைப்  பற்றிய நேரான பார்வையாகும். இக்கண்ணோட்டத்தில் நாம் பார்க்கும்போது முஸ்லிம்  இறைத்தூதைச் சுமந்தவன் என்று விளங்கி கொள்ளலாம். மேலும் முஸ்லிம் , வாழ்க்கையின் எல்லாத்  துறைகளிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மட்டுமே அடிபணிந்து நடக்க வேண்டும். அந்தத் தூதுத்துவத்தையும், அவனது கட்டளைகளையும் ஏற்காதவரை அவனுடைய இஸ்லாம் பூரணத்துவம் பெறாது. தனது நடைமுறை வாழ்வில் அதை உறுதிப்படுத்தி மனத்தூய்மையுடன் செயல்படுத்தாத வரை அவனது வணக்கங்கள் அல்லாஹ்வின் திருப்திக்காக செய்யப்பட்டதல்ல என்பதை விளங்கிக்  கொள்ளலாம்.

இந்தத் தூதுத்துவம்தான் முஸ்லிம்  தன்னை இஸ்லாமியைச் சேர்ந்தவன் என்று செல்வதற்குரிய சரியான அடையாளமாகும். அதுமட்டுமே அல்லாஹ்வின் பாதையில் போராடும் வாய்மைமிக்க முஸ்லிம்களின் அந்தஸ்தில் அவரை சேர்ப்பிக்கிறது. அதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிகோலுகிறது. மேலும் மனிதன் இப்புவியில் படைக்கப்பட்டதற்கான, ஏனைய படைப்பினங் களைவிட மேன்மை பெற்றதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்துகிறது.

ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில்  [வாகனங்கள் மீதும்] கடலில் [கப்பல்கள் மீதும்] நாம்தாம்  அவர்களைச்  சுமந்து செல்லும்படி  செய்கிறோம். நல்ல ஆகாரங்களையும்  நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த [மற்ற ஜீவராசிகளில் ] அநேகவற்றின் மீது [பொதுவாக] நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி  வைத்திருக்கிறோம்.
அல்குர்ஆன்.. 17..70]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு. ''அதிகமாக குர்ஆன் ஓதுவார்.''

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!