-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் பெற்றோர்களை நோவினை செய்வதுபற்றி அச்சம் கொண்டிருப்பார்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  பெற்றோர்களை நோவினை செய்வதுபற்றி அச்சம் கொண்டிருப்பார்.

பெற்றோருக்கு உபகாரம் செய்வது பற்றிய ஆர்வமூட்டும் தெளிவான ஆதாரங்களை நாம் கண்டுணர்ந்தபின் , வரும் பக்கங்களில் அவர்களை நோவினை செய்வது பற்றிய எச்சரிக்கைகளைக் காண்போம்! அதை படிக்கும்போதே பெற்றோரை நோவினை செய்யும் கடினசித்தம் கொண்ட பிள்ளைகளின் இதயம் திடுக்கிட வேண்டும் அவர்களது மனம் அஞ்சி நடுங்க வேண்டும்.


பெற்றோருக்கு உபகாரம் செய்வது அல்லாஹ்வை ஈமான் கொள்வதும் இணைத்துக் கூறப்பட்டதுபோல, பெற்றோருக்கு நோவினை அளிப்பதை அல்லாஹ்வுக்கு இணைவைப்பதுடன் சேர்க்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியதாகும். அது உண்மை முஸ்லிமின் இதயத்தை திடுக்கிட செய்யும் கொடூரமான தீமையாகும். அதை சரி செய்துகொள்ள இதயம் துடிக்கும். ஏனெனில், அது பாவம் மற்றும் குற்றங்களில் மிக கொடூரமானதாகும் .

அபூ பக்ரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. ''உங்களுக்கு பாவங்களிலெல்லாம் மிகப்பெரிய பாவத்தை அறிவிக்கட்டுமா?'' என நபி [ஸல்] அவர்கள் மூன்றுமுறை கேட்டார்கள். நாங்கள்  ''அறிவித்துத்  தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினோம். நபி [ஸல்] அவர்கள்  ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோர்க்கு நோவினை செய்தல் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே ! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் எதனுடன் இணைத்து கூறியுள்ளான் என்பதை நாம் ஆழமாக யோசிக்கவேண்டும்.  அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் , அதனுடன் சேர்த்து பெற்றோர்களுக்கு நோவினை செய்தல் .

தாயோ அல்லது தந்தையோ அல்லது இருவரோ யாரவது மனதளவில் பிள்ளைகளினால் மனம் சங்கடம் படுவது, மனவேதனை படுவது, இது ஒரு நோவினை தான்! அவர்களை நாம் எப்படி மனகுளிர  வைப்பது அதாவது அவர்களை சந்தோஷப்படுத்துவது, உபகாரம் செய்வது என்பதை பற்றி இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பில்  பார்க்கலாம்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!