-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார் [முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
உண்மை முஸ்லிம்  தனக்கு அல்லாஹ் விதித்ததை மகிழ்வுடன்  ஏற்றுக் பொருந்திக் கொள்வார். அவரது பார்வை நபி [ஸல்] அவர்களின் பொன்மொழியில்  நிலைகொள்ளும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  '' முஸ்லிமின் அனைத்து விஷயங்களும் ஆச்சிரியமானதுதான். அவரது அனைத்து விஷயங்களும் நன்மையானதே. அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைகிறது.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]


இதற்கு காரணம் முஸ்லிம்  அல்லாஹ் விதித்த விதியை ஈமான் கொள்வது ஈமானின் முக்கியமான பகுதி என்பதை உறுதி கொண்டிருப்பதுதான். அவருக்கு எது கிடைக்க வேண்டுமென்று விதி இருக்கிறதோ அது அவரை விட்டுத் தவறிவிடாது. ஏனெனில், அது அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்டது,, அதை எதிர்கொள்வதை தவிர்த்திடமுடியாது. அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்பவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மகத்தான நற்கூலியைப் பெற்றுக்கொள்கிறார். அல்லாஹ்விடம் ஈடேற்றமடைந்த , அடிபணிந்த முஃமின்களின் பட்டியலில் இடம் பெறுவார்.

இவ்வாறாக அவரது அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமைகிறது. மகிழ்ச்சியில் உபகாரியான, மகத்துவமிக்க அல்லாஹ்வுக்கு  நன்றி செலுத்துகிறார். துன்பத்தின் அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்து பொறுமையைக் கைக்கொள்கிறார். அல்லாஹ் விதித்ததை ஏற்று திருப்தி கொள்கிறார். இந்த இரு நிலைகளும் அவருக்கு மிக்க நன்மையானவையே!

அல்லாஹ்வையே  எதிர்நோக்குவார்........
சில சந்தர்ப்பங்களில் இறையச்சமும் பணிவும் அறிவாற்றலும் நிறைந்த முஃமினுக்கு மறதியின் நிழல்கள் அவரது இதயத்தை மூடிக் கொள்ளும். அதனால் அவரது பாதங்கள் தடுமாறும், அல்லது பொருத்தமற்ற குறைகள் ஏதேனும் ஏற்படும். எனினும் அவர் வெகு சீக்கிரத்தில் தனது மறதியிலிருந்து மீண்டு, தடுமாற்றத்தை சரி செய்து, நிகழ்ந்த தவறுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வார். அஞ்சி மன்னிப்பு கோரியவராக அபயமளிக்கும்  தனது இறைவனின் பாதுகாப்பின் நிழலில் ஒதுங்கி கொள்வார்.

நிச்சயமாக எவர்கள்  [அல்லாஹ்வுக்குப்] பயப்படுகிறார்களோ அவர்களுள் ஷைத்தானுடைய [தவறான] எண்ணம் ஊசலாடினால் அவர்கள் [அல்லாஹ்வை] நினைக்கிறார்கள். அது சமயம் அவர்களுடைய [அறிவுக் ] கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள்.
அல்குர்ஆன்.. 7..201]

அல்லாஹ்வின் நேசமும் அவனது அச்சமும் நிரம்பிய இதயத்தில் மறதி  நீடிக்காது.  அவனது ஏவலையும்  நேர்வழியையும் புறக்கணிக்கும் இதயங்களில்தான் மறதி  நீடிக்கும். அல்லாஹ்வுக்கு அடிபணிதல்  மன்னிப்புக் கோருதல் மற்றும் தவறுகளுக்கு பச்சாதாப்படுவதற்காக எல்லா நிலைகளிலும் உண்மை முஸ்லிமின் இதயம் விரியத்  திறந்திருக்கும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு... அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வார். அவசியம் படித்து தெரிந்துக் கொள்ளவேண்டிய விடயம்..மற்றவர்களுக்கும் பகீர் செய்யவும்...அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்..  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!