-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

தன் அதிகாரத்தின் கீழ் உள்ளவர்களிடம் தனது பொறுப்பை அறிவார்.[முன்மாதிரி முஸ்லிம் ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிமின் அதிகாரத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் கட்டளைகளில் அலட்சியம் மற்றும் குறைபாடுகள் ஏற்பட்டால்  அதற்கு அந்த முஸ்லிம்  பொறுப்பாளியாகி இறைவனால் விசாரிக்கப்படுவார்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''நீங்கள் அனைவரும் பொறுப்பாளர்களே ! நீங்கள் அனைவரும் பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப்  பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]


தனது பொறுப்பை உணர்ந்திருக்கும் முஸ்லிம்  தனது குடும்ப உறுப்பினர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளில் வரம்பு மீறுவதைச் சகித்துக்கொள்ள மாட்டார். அவரால் இது விஷயத்தில் பொறுமை காக்கவே முடியாது. அது எத்தகு விளைவுகளை ஏற்படுத்தினாலும் சரியே! அந்த தவறை அகற்றுவதில் தீவிரமாக இருப்பார். கடமையில் அலட்சியம் செய்யமாட்டார். தனது ஈமானில் பலவீனம் கொண்ட ஆண்மையற்ற கோழை  மட்டுமே தனது அதிகாரத்தில் உள்ளவர்களின் வரம்பு மீறலை சகித்துக்கொள்ள முடியும்.

நன்கு சிந்தித்து பாருங்கள்! உங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்கள் மார்க்க விடயத்தில் அலட்சியம் செய்வது அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது ஒரு நல்ல முஸ்லிமுக்கு அழகு அல்ல!  அப்படி ஒரு நல்ல சிறந்த உண்மையான முஸ்லிமால் இருக்கமுடியாது. அவர் இருக்கவும் மாட்டார்.

நிச்சயமாக அல்லாஹ் மறுமைநாளில் நம்மிடம் பொருப்பைப் பற்றி விசாரிப்பான் '' நாம் அதற்க்கு என்ன பதில் கூறுவோம்..?  என்பதை இப்பொழுதே யோசிப்போம். நம்முடைய பொறுப்பில் உள்ளவர்களை நாம் மார்க்கத்தின் அடிப்படையில் நடத்தவேண்டும்!  அவர்களுக்கு நாம்தான் புரியவைக்கவேண்டும்!

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு...
அல்லாஹ் விதித்ததை பொருந்திக் கொள்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!