-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

சனி, 29 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  அருகிலிருக்கும் அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிப்பார்.

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்று இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம்  அண்டை வீட்டாரில்  மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள்  கூறினார்கள்.. நான் நபி [ஸல்] அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்? என்று கேட்டதற்கு நபி [ஸல்] அவர்கள்  ''அந்த இருவரில் யாருடைய வாசல் [உம வீட்டுக்கு] நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு '' என்று கூறினார்கள்.
நூல்.. அல்  அதபுல் முஃப்ரத் ]


நபி [ஸல்] அவர்களின் இந்த மேன்மையான  வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்தது அபூஹுரைரா [ரலி] கூறினார்கள்.. ''தனது அண்டை வீட்டாரில்  அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.''
நூல் அல் அதபுல் முஃப்ரத்]

அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம் , அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார் . நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும்  இது விஷயத்தில் நபி [ஸல்] அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.

சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்!

அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஓர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும்.ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர் . அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான  பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே . அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.''
நூல்.. ஸூனனுத் திர்மிதி]

சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம்  போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி  நபி [ஸல்]  அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.
நூல்.. முஸ்னத் அஹ்மத்]

நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாக கருதினார்கள். ஸயீது பின் ஆஸ் [ரலி] அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம்  ''இது இந்த வீட்டின் விலையாகும் . ஆனால், ஸயீது  [ரலி] அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது  [ரலி] அந்த வீட்டுக்காரருக்கு ஓர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.
இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்மந்தப்பட்ட அழகிய உபதேசங்களை கண்டோம். இனி இன்ஷாஅல்லாஹ் பிறகு கெட்ட  அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களை  காண்போம்.  [ரொம்ப அவசியம் ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!