-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

செவ்வாய், 25 அக்டோபர், 2016

ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதையே அண்டை வீட்டாருக்கும் விரும்புவார்.

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையாக நடப்பார்.
இம்மகத்தான மார்க்கத்தின் பிரகாசத்தை தனது இதயத்தில் ஏந்திக் கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம் ,தனது அண்டை வீட்டாருடன் பெருந்தன்மையுடனும் நல்லுறவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு ஏதேனும் தேவைப்பட்டாலும் அதைக் கொடுக்க வேண்டும் என்பது நபி [ஸல்] அவர்களின் வழிகாட்டுதலாகும் .

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''ஒருவர் தனது அண்டை வீட்டார் தனது வீட்டின் சுவரில் கட்டை ஒன்றை ஊன்றுவதைத் தடை செய்ய வேண்டாம்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]


ஒரு முஸ்லிம் தனக்கு விரும்புவதையே அண்டை வீட்டாருக்கும் விரும்புவார்.


உண்மை முஸ்லிம்  தனது அறிவுக்  கண்ணை நன்கு திறந்து வைத்திருப்பார். மேலான மார்க்கத்தின் நேர்வழியைப் பெற்றவராகவும், மென்மையான உள்ளமும், மலர்ந்த சிந்தனையும் உடையவராகத் திகழ்வார். தனது அண்டை வீட்டாரின் உணர்வுகளைப்  புரிந்து அவரது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து அவரது துன்பம் கண்டு வேதனையும் அடைவார்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

இமாம் முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் நபி [ஸல்] அவர்கள் கூறியதாக அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..   ''என் ஆன்மாவை தன்  கைவசம் வைத்திருப்பவனின் மீது ஆணையாக! எந்தவொரு அடியானுக்கு தனக்கு விரும்புவதையே தனது அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்''. '[அல்லது  நபி [ஸல்] அவர்கள்  ''சகோதரருக்கு'' என்று கூறினார்கள்]

உண்மை முஸ்லிம்  தனது வீட்டின் சமையலறையிலிருந்து உணவின் மனம் வெளியேறும்போதெல்லாம் சிரமத்திலும்  வறுமையிலும் வாடி கொண்டிருக்கும் தனது அண்டை வீட்டாரை நினைவில் கொள்வார். அந்த வாசனை தமது அண்டை வீட்டாரை வேதனைப்படுத்தி அவர்களுக்கு அந்த உணவைச் சாப்பிட ஆவலைத் தூண்டும். ஆனால் சமைக்க வசதியற்றவர்களாக இருப்பார்கள். அவர்களில் சிறுவர்களும் அனாதைகளும், வறியவர்களும் , முதியவர்களும் இருப்பார்கள். என்பதையும் முஸ்லிம்  கவனத்தில் கொள்வார். இது பற்றி முஸ்லிம்களின் இதயத்தில் நபி [ஸல்] அவர்கள் விதைத்த சமூக உணர்வு கொண்ட நற்பண்பு இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் வெளிப்படும்.

நபி ஸல்] அவர்கள் அபூதர் [ரலி] அவர்களிடம் கூறினார்கள்..  ''அபூதர்ரே ! நீர் ஆணம்  சமைத்தால் அதில் கொஞ்சம் தண்ணீரை அதிகப்படுத்திக் கொள்ளும். உமது அண்டை வீட்டாரையும் விசாரித்துக் கொள்ளும்.
நூல்.. முஸ்லிம் ]

மற்றொரு அறிவிப்பில்..  'நீர் ஆணம்  சமைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்திக் கொண்டு பிறகு உமது அண்டை வீட்டாரை கவனித்து நல்லவிதமாக அவர்களுக்கும் சிறிது கொடுங்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ]

தனது அண்டை வீட்டார் வறுமையிலும் கிராமத்திலும் இருக்கும் நிலையில் தான் மட்டும் வளமையும், வசதியுமாக  ஆடம்பரத்துடன் இருப்பதை உண்மை முஸ்லிமின் மனசாட்சி ஒப்புக் கொள்ளாது. எப்படி ஒப்புக் கொள்ளும்? அவரது அடிமனதில் அண்டை வீட்டாருடன் இனிய நேசத்தையல்லவா இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் முஃமினாக[இறை விசுவாசியாக ]மாட்டார் .''
முஸ்னத் அபூ யஃ லா ]

மேலும் கூறினார்கள்.. ''தனது அண்டை வீட்ட்டார் பசித்திருப்பது தெரிந்தும் தான் மட்டும் வயிறு நிரம்ப உண்டு இரவு கழிப்பவர் என்னை விசுவாசித்தவராக மாட்டார்.
முஸ்னத் அல் பஸ்ஸார் ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ........







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!