-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

புதன், 28 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார் [தொடர் 2]

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
ஒரு முஸ்லிம்  சிறந்த கணவராக திகழ்வார் [தொடர் 2]

உஸ்மான் இப்னு மள்வூன் [ரலி] அவர்களின் மனைவி கவ்லா  பின்த் ஹகீம்  [ரலி], நபி [ஸல்]  அவர்களின் மனைவியரிடம் அழுக்கடைந்த ஆடையுடன் அலங்கோல நிலையில் வந்தார். அன்னையர்கள் ''உனக்கு என்ன நேர்ந்தது? [ஏன்  இந்த கோலத்தில் இருக்கிறாய்] என்று கேட்டார்கள். கவ்லா  [ரலி] அவர்கள் தனது கணவரைப் பற்றி ''இரவு நேரங்களிலும் நின்று வணங்குகிறார். பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்'' என்று கூறினார். அன்னையர்கள் நபி [ஸல்] அவர்களிடம்  இதுபற்றிக் கூறினார்கள். நபி [ஸல்] அவர்கள் உஸ்மான் [ரலி] அவர்களைக் கண்டித்தவர்களாக  ''என்னிடத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா? என்றார்கள்.  அவர் ''ஆம்! இருக்கிறது! அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்'' என்றார்கள் அதற்குப் பிறகு கவ்லா  [ரலி] மணம்  பூசி அலங்காரமாக வந்தார்கள்.


மற்றொரு அறிவிப்பில் நபி [ஸல்] அவர்கள் உஸ்மானே ! நமக்கு துறவறம் விதிக்கப்படவில்லை, என்னிடம் உமக்கு முன்மாதிரி கிட்டவில்லையா? அல்லாஹ் மீது ஆணையாக! நான் உங்களைவிட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை உங்களைவிட அதிகம் பேணுகிறேன்'' என்று கூறினார்கள்.
[தபகாத் இப்னு ஸஅத் ]

சங்கைமிகு ரசூலுல்லாஹ் [ஸல்] அவர்கள் தங்களது அழகிய வழிமுறையை தோழர்களுக்கு கற்றுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள் . ஆகவேதான் மார்க்கத்தில் நடுநிலையை கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்க்கை பண்பாகவே மாறிவிட்டது அவர்களில் ஒருவர் இதற்கு மாறுசெய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி [ஸல்] அவர்களிடம் முறையிடுவார்கள்.

அபூ ஜுஹைஃபா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..  ''நபி [ஸல்] அவர்கள் ஸல்மான்  ஃபார்ஸி  [ரலி] அவர்களுக்கும் அபூதர்தா [ரலி] அவர்களுக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபூதர்தா [ரலி] அவர்களை சந்திக்க ஸல்மான்  [ரலி] சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி அலங்காரமற்றவராக இருந்தார். ஸல்மான்  [ரலி] ''உனக்கு என்ன நேர்ந்தது?  என்று கேட்டார்கள். அவர்  'உமது சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எதுவும் தேவையில்லை'' என்றார்.

அபூதர்தா [ரலி] வந்தவுடன் ஸல்மான்  [ரலி] அவர்களுக்கு உணவு தயார் செய்து  ''நீங்கள் சாப்பிடுங்கள், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்'' என்றார். ஸல்மான்  [ரலி] அவர்கள்  ''நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்'' என்று மறுத்துவிட்டார். பின்னர் அபூதர்தா [ரலி] அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார். இரவானபோது அபூதர்தா [ரலி] நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான்  [ரலி]  ''தூங்குங்கள்'' என்று கூறியவுடன் தூங்கினார். பின்பும் அபூதர்தா [ரலி]  தொழ  முயன்றபோது  ''தூங்குங்கள்'' என ஸல்மான்  [ரலி] கூறினார்கள்.

இரவின் கடைசிப் பகுதியானதும் ஸல்மான்  [ரலி] அவர்கள்  ''இப்போது எழுந்திருங்கள்'' என்று கூறி இருவரும் தொழுதார்கள். அபூதர்தா [ரலி] அவர்களிடம்  ''உமது இறைவனுக்கு உம்மீது கடமை உண்டு . உமது ஆன்மாவுக்கு உம்மீது கடமை உண்டு.  உமது குடும்பத்தாருக்கு உம்மீது கடமை உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேறுங்கள்'' என்று ஸல்மான்  [ரலி] கூறினார்கள்.

ஸல்மான்  [ரலி]  நபி [ஸல்] அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறியபோது நபி [ஸல்] அவர்கள்  ''ஸல்மான் உண்மையே உரைத்தார்'' என்றார்கள்.
நூல்.. ஸஹீஹுல் புகாரி]

அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம்  தனது மனைவியுடனான இல்லறத்தில் பசுமைகள் வாடிட  அனுமதிக்கக்  கூடாது. இன்பமூட்டும் விளையாட்டினாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும்  தனது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சியூட்டி தங்கள் இருவரிடையே உள்ள உறவை செழிப்பாக்குவார். இது விஷயத்தில் நபி [ஸல்] அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலை நிறுத்துவது, முஸ்லிம்  சமுதாயத்தை உருவாக்குவது, அறப்போருக்காக ராணுவத்தை தயார்ப்படுத்துவது, ஈனும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் அவர்களை ஒரு முன்மாதிரியான கணவராக தனது மனைவிகளுடன் அழகிய பண்புகளுடன் பரந்த மனத்துடனும்  பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை.

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடரைப் பிறகு பார்ப்போம்..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! இந்த முன்மாதிரி முஸ்லிம்  கட்டுரைகளை தொடர்ந்து படித்து வாருங்கள்! இன்ஷாஅல்லாஹ் உங்கள் குடும்பத்தில் ஒரு இன்பமான , மகிழ்ச்சியான மார்க்கத்தின் சூழலால் ஏற்படும் என்பதில் ஒரு துளிக்  கூட ஐயம் இல்லை!  உங்களுக்கு படிக்க படிக்க ஆர்வம் வரும்.  மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!  இன்ஷாஅல்லாஹ் . சுவனத்தில்  சிரித்த முகத்துடன்  மகிழ்ச்சி வெள்ளத்தில் நீங்களும் உங்கள் மனைவியும் நுழைவீர்கள்!       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!