-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்![தொடர் 1 ]

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஒரு முஸ்லிம்  சிறந்த கணவராக திகழ்வார்!

இந்த ஆதாரங்கள், மனைவியிடம் நீதமாக அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்துவதை முஸ்லிம்  அறிந்திருப்பார். எனவே நிச்சயமாக அவர் சிறந்த கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவரின் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று அவரின் உன்னதமான உயர்ந்த தோழமையில்  வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாக கருதுவாள் .

அவர் வீட்டினுள் நுழைந்தால் தனது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் மகத்துவமிக்க அழகிய முகமனைக் கூறியபடி அவர்களை எதிர்கொள்வார். அது இஸ்லாமுக்கே  உரிய தனித்துவமிக்க முகமனாகும் .


......ஆனால் நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட, மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான [ஸலாமுன் என்னும் ] வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் [ஒருவருக்கு மற்றொருவர்] கூறிக்கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
அல்குர்ஆன் .. 24..61]

இந்த முகமனை  நபி [ஸல்] அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அனஸ் [ரலி] அவர்களிடம் கூறினார்கள். ''எனதருமை மகனே! நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக்கொள் . அது உனக்கு  உனது குடும்பத்தாருக்கும் அருளாகும்.
நூல்.. ஸூனனுத் திர்மிதி]

ஒரு  மனிதர் தனது  குடும்பத்தாரை ஸலாம் கூறி சந்திப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய காரியம்! அவர்களது வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உடையதாக ஆக்கி இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் ஏற்படுத்துவார். தனது மனைவிக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டால் உதவிக்கரம் நீட்டுவார். வேலை பளுவின்  காரணமாக அவளுக்கு களைப்பு, சடைவு சஞ்சுசஞ்சலம் ஏற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிப்பார்.

தன்  மனைவியின் உள்ளத்தில்  'தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமுடைய , கண்ணியமும் வலிமையும்  கொண்ட கணவரின் நிழலில் இருக்கிறோம்' என்ற உணர்வை ஏற்படுத்துவார். அவளைப்  பாதுகாத்து பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார். தனது சக்திக்கு ஏற்ப அவளது முறையான தேவைகளை நிறைவேற்றித் தருவார். நேரிய மார்க்கம் அனுமதியளித்த பிரகாரம் தன்னை அழகுபடுத்தி கொண்டு அவளது பெண்மையை திருப்திப்படுத்துவார். தனது தேவைகள், அல்லது நண்பர்கள் அல்லது சொந்த வேலைகள் அல்லது படிப்புகள் என்று தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நேரமனைத்தையும் செலவிட்டுவிடாமல் அவளது  தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்குவார்.

கணவனின் மூலம் சுகமனுபவித்துக்கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான் அவர் தனது அனைத்து நேரங்களையும் தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற வணக்க வழிபாடுகளில் செலவிடுவதை கூட  இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இது இம்மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமத்துவ அடிப்படைக்கு எதிராகும்  இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் [ரலி] அவர்கள் அறிவித்த நபிமொழியில் காணுகிறோம்.

அப்துல்லாஹ் [ரலி] அவர்களின் அளவுக்கதிகமான வணக்கங்களைப்  பற்றி அறிந்த நபி [ஸல்] அவர்கள்  ''நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே ? என்று கேட்டார்கள். அவர்  ''ஆம்! இறைத்தூதரே ! என்றார். நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்  ''அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள். நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள். தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன '' என்று கூறினார்கள்.
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
தொடர் 1  

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!