-->
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் நல்லடியார்களே! முஸ்லிம் ஆண் பெண் மீது கல்வி கடமை . முன்மாதிரி முஸ்லிம் ! ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் ! என்பதை தெளிவாக ஆதாரங்களுடன் உங்களுக்கு கட்டுரைகளாக வெளியிடப்படுகிறது. நீங்கள் அவசியம் படித்து அறிந்துகொள்ளவேண்டும் ! பிடித்தால் லைக் போடுங்கள்! உங்களுடைய கருத்துக்களை அவசியம் எழுந்துங்கள் ! தொடர்ந்து படித்து வாருங்கள்! மற்றவர்களுக்கும் ஏத்தி வையுங்கள்! .... கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

ஒரு முஸ்லிம் மணவாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்றுவார்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
ஒரு முஸ்லிம் மணவாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டுதலை பின்பற்றுவார் .

உண்மை முஸ்லிம்  தனது இல்லறத்தில் மனைவியுடனான உறவுகளைப்  பேணுவதில் இஸ்லாமிய நெறியை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் குறித்தும், அவளுடனான நல்லுறவு குறித்தும் இஸ்லாமிய வழிகாட்டுதலை நாம் அறியும்போது ஆச்சிரியத்தில் ஆழ்ந்துவிடுவோம்.

இஸ்லாம் பெண்ணைப்பற்றி நிறைய உபதேசித்துள்ளது. அவளுக்கு எந்த மார்க்கமும் அளித்திராத உயரிய அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. இதோ பெண்களை பற்றி அருட்தூதர் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் வழங்கிய உபதேசங்களில் சில பின்வருமாறு..


''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! ஏனெனில் பெண் [வளைந்த] விலா  எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள்  விலா  எலும்பின் மிகக்  கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.''
நூல்கள்... ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]

ஸஹீஹ் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்  மற்றொரு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''பெண் விலா  எலும்பைப் போன்றவள், அவளை நீ நிமிர்த்த நினைத்தால் ஒடித்து விடுவாய். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய்.

ஸஹீஹ் முஸ்லிம்  மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது. .. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''பெண் விலா  எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள். ஒரே நிலையில் உனக்கு நிலையாக இருக்கமாட்டாள். அவளிடம் நீ இன்பத்தை அடைய நாடினால் குறையுள்ள நிலையிலேயே அவளிடம் இன்பத்தை அடைந்து கொள்வாய். அவளை நீ நேராக்க முயன்றால் ஒடித்துவிடுவாய். அவளை ஒடித்து என்பது அவளை தலாக் விடுவதாகும்.''

நபி [ஸல்] அவர்களின் இலக்கிய நயமான இந்த உதாரணத்தில் பெண்ணின் இயற்கையான தன்மைகளை, பண்புகளை மிகத்  துல்லியமாக விவரித்துள்ளார்கள்  கணவன் விரும்புவது போன்று மனைவி ஒரே நிலையில் சீராக இருக்கமாட்டாள். அவளிடம் சில கோணலான பண்புகள் இயல்பாகவே அமைந்திருக்கும் என்பதை கணவன் விளங்கிக்கொள்ள வேண்டும். பூரணமானது, சரியானது என தான் நினைக்கும் பாதையின்பால் அவளைத் திரும்புவதில் வன்மையான முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. பெண்மைக்கென்று அமைந்துள்ள இயற்கைப் பண்புகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அவளை அல்லாஹ் எந்த இயல்புடன் படைத்தானோ அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அவளது சில குணங்கள் தனது விருப்பத்திற்கேற்ப இருக்காது. இதனால்தான் விரும்புவதுபோல அவளை மாற்றிவிட வேண்டுமென நினைப்பது தனது விலா  எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக்கூடாது அவற்றை நோக்கியே தீருவேன் என்று நினைப்பது போலாகும்.  அப்படி நினைத்துச் செயல்பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய்  நிற்கும். அதுபோன்று கணவன்  மனைவியை தான் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் தலாக்கில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

பெண்ணின் இயற்கையான ஆழமாக விளங்கி விவரித்த நபி [ஸல்] அவர்களின் வழிகாட்டுதலை உள்ளத்தில் கொண்டுள்ள உண்மை முஸ்லிம்  தனது மனைவியின் குறைகளை சகித்துக்கொள்வார். அவளது சிணுங்கல்களை பொருட்படுத்த மாட்டார். அப்போதுதான் இல்லம் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இல்லாத நிம்மதியளிக்கும் அமைதிப்  பூங்காவாகத் திகழும்.

பெண்ணைப் பற்றி நபி [ஸல்] அவர்களின் உபதேசங்கள் எண்ணற்றவை. அதில்  'தனது மனைவியிடத்தில் அழகிய முறையில் நடந்துகொள்பவரே உம்மத்தில் சிறந்தவர்' என வர்ணிக்கப்பட்டுள்ளது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''முஃமின்களின் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே . உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவரே.''
ஸூனநுத் திர்மிதி]

இந்த நபிமொழியின் கருத்து.. பரிபூரண ஈமான் உள்ளவர் மிக அழகிய குணத்தை  கொண்டிருக்க வேண்டும். அழகிய குணமில்லாமல் பரிபூரண ஈமானை அடைய முடியாது. நாம் யாரை நம்மில் சிறந்தவராக கருதுகிறோமோ அவர் தன்  மனைவிக்கும் சிறந்தவராக விளங்க வேண்டும். நம்மிடத்தில் சிறந்தவர்க இருந்து மனைவியிடத்தில் சிறந்தவர்க இல்லையென்றால் உண்மையில் அவர் நம்மில் சிறந்தவர் அல்லர்!

சில பெண்கள் தங்களுடைய கணவன்மார்களைப்பற்றி முறையிடுவதற்காக நபி [ஸல்] அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது நபி [ஸல்] அவர்கள் ஆண்களுக்கு கேட்கும் விதமாக பின்வருமாறு கூறினார்கள்.. ''முஹம்மதின் குடும்பத்தாரிடம் பல பெண்கள் தங்களது கணவர்மார்களைப்பற்றி முறையிட வருகிறார்கள். அக்கணவர்கள்  உங்களில் சிறந்தவர்கள் அல்லர்.''
நூல்.. ஸூனன் அவூதாவூத்]

 நேரிய மார்க்கமான இஸ்லாம் பெண்ணுக்கு நீதி செலுத்தி அவளைக்  கண்ணியப்படுத்துவதில் மேலோங்கி நிற்கிறது. அவளைக் கணவன் வெறுத்தாலும் ஆவலுடன் அழகிய முறையிலேயே நடந்துகொள்ள உபதேசிக்கிறது. பெண்மையின் வரலாற்றில் வேறெங்கும் இக்கணியத்தை  அடைந்துகொள்ள முடியாது.

......மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையில்  [சகிப்புத் தன்மையுடனும்] நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நீங்கள்  வெறுத்தபோதிலும் சரியே! நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகளை வைத்திருக்கலாம்.
அல்குர்ஆன் ..4..19]

இத்திருவசனம் முஸ்லிமின் உள்ளுணர்வை தட்டியெழுப்புகிறது,, அவரது கோபத்தை தணிக்கிறது. அவள் மீதான வெறுப்பை அகற்றுகிறது. இதன்மூலம் திருமண உறவு அறுந்துவிடாமல்  பலப்படுத்தப்படுகிறது. இங்குமங்கும் அலைபாயும் மடத்தனமான எண்ணங்களாலும் மாறிக் கொண்டே இருக்கும் சுபாவத்தினாலும் இத்தூய்மையான திருமண உறவில் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

இறுதியாக ஒரே ஒரு ஹதீஸை சொல்லி முடித்து கொள்கிறேன்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.''
நூல் ஸஹீஹ் முஸ்லிம் ]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

அன்புள்ள கணவன்மார்களே! இந்த கட்டுரை தங்களுக்காக உள்ளது! இதை நீங்கள் அவசியம் படித்து பயன்பெறவும்! நம்மில் சிலர் குடும்பங்களில் சண்டையும், சச்சரவுகளும், வாக்குவாதங்களை ஏற்படுகின்றன. சிலர் வீட்டில் தலாக்கு  வரை போகிறது. மன  அமைதி இல்லாமல் , புயல் காற்றாக வீசிக் கொண்டே இருக்கும் சில குடும்பங்களில்  ஒரு நல்ல சுகமான தென்றல் காற்றாக மாற உங்களிடம் வந்தியிருக்கும் ஒரு அருமையான  மருந்து இதுதான்! உங்கள் வீட்டில் ஒரு அழகான சூழல் உருவாக , அமைதியும், நிம்மதியும் ஏற்பட அல்லாஹ் வின் உதவியால் இதை நீங்கள் படித்து. நீங்கள் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டும். இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பில் மனைவியின் கடமைகள் என்ன என்பதை பார்ப்போம்.. உங்கள் ஆதரவு எப்பொழுதும் வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் இனி எப்பொழுதும் உங்கள் வீட்டில் அமைதியும், நிம்மதியும் இஸ்லாமியா சூழ்நிலையும் காணலாம்.. அதுதான் எங்கள் பேராசை! உங்கள் வீடுகள் சுவனமாக காட்சியளிக்க வேண்டும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comment...........!!!