அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
ஒரு முஸ்லிம் மனைவியை செம்மையாக நிர்வகிப்பார் [தொடர் 1]
இவ்வாறான உயரிய பண்புகளும் மற்றும் நல்லுறவில் மூலம் முஸ்லிம் , மனைவியின் இதயத்தில் ஆட்சி செய்வார். அவளும் அவருக்கு பணிந்து, அவரது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்யமாட்டாள் .
முஸ்லிமான கணவருக்கு மார்க்கம் நற்பண்புகளை கற்றுக் கொடுத்து பல தகுதிகளையும் அளித்து, பல சட்டங்களையும் வகுத்து கொடுத்திருப்பதினால் அவரே பெண்ணை நிர்வகிப்பவராக இருக்கிறார்.
[ஆண் , பெண் , இரு பாலாரில் ] ஆண் பாலாரை [ப் பெண் பாலார் மீது] அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன், [ஆண் பாலார்] தங்கள் பொருள்களை [ப் பெண் பாலாருக்கு [ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்........
[அல்குர்ஆன் .. 4..34]
இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகள் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. 'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளாரே . அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் மகன் [குடும்ப தலைவன்] தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் [மனைவி] தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள் . அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.''
நூல்கள்.. ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் ]
இவ்வாறு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியாக இருக்கிறார். ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில் இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது உயர்வான அடிப்படையும், நற்செயலும் இணைந்த ஆக்கப்பூர்வமான ஒன்றாகும். அது வீண்விளையாட்டும், பரிகாசத்திற்குரியதுமல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.
இஸ்லாம் பெண்ணுக்கு உயரிய அந்தஸ்து வழங்கியிருக்கும் அதே நேரத்தில் வாழ்வில் அவள் தனது பங்கை அறிந்து, மார்க்கம் அவளுக்கென ஏற்படுத்தியுள்ள வரம்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமெனவும் கட்டளையிடுகிறது. அப்போதுதான் அவள் சமூகத்தில் தனது கடமைகளை சிறப்பாக நிறைவு செய்வாள். அவள் குழந்தைகளின் பராமரிப்பில் கணவனுடன் பங்கெடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை வெற்றிகரமாகவும் அழகும் கம்பீரமும் நிறைந்ததாகவும் அமைத்துக் கொள்ள முடியும்.
கணவன் மனைவியிடம் சிறந்த முறையில் நடக்க வேண்டுமென இஸ்லாம் விரும்பும் அதே நேரத்தில் பெண் அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட நேர்மையான விஷயங்களில் ஆணுக்குக் கட்டுப்பட வேண்டுமென மிக உறுதியான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''நான் ஒருவரை ஒருவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டுமென ஏவுவதாக இருந்தால் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு மனைவியை ஏவியிருப்பேன்.''
நூல்.. ஸூனனுத் திர்மிதி]
மேலும் கணவன் திருப்தி கொள்வதை மனைவி சுவனம் நுழைவதற்கான காரணமாக இஸ்லாம் அமைத்துள்ளது.
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''கணவன் தன் மீது திருப்தி கொண்ட நிலையில் மரணம் அடையும் பெண் சுவனம் நுழைவாள்.''
நூல்.. ஸூனன் இப்னு மாஜா]
கணவனுக்குக் கட்டுப்படாத பெண் மீது அவள் திருந்தி தனது கணவனுடன் இணக்கமாக நடந்து கொள்ளும் வரை மலக்குகள் சாபமிடுகிறார்கள் என்று நபி [ஸல்] அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள் .
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''ஒரு பெண் தனது கணவனின் படுக்கையை வெறுத்த நிலையில் இரவைக் கழித்தால் விடியும் வரை மலக்குகள் அவளை சபிக்கிறார்கள்.''

இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சியை பார்ப்போம்...
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும் , எவ்வாறு வாழ்க்கையைக் கழிக்க வேண்டும் என்பதை அழகான முறையில் முன்மாதிரி முஸ்லிம் கட்டுரையை படியுங்கள்!

கருத்துகள்
கருத்துரையிடுக
welcome to your comment...........!!!